குடும்பத் தலைவி டூ சமூகத் தலைவி!

எஸ்.மாரிமுத்து

ர்வதேச மகளிர் தினம் (International Women's Day) என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது பல ஆண்டுகால போராட்டத்தின் வெற்றி. பெண்களின் வலிமை, அறிவு மற்றும் சமூக மாற்றத்தை மையமாகக் கொண்ட சிறந்த 10 ஆளுமைப்பண்பு மொழிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

International women's day

எதையாவது சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள்; ஏதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதை பெண்ணிடம் சொல்லுங்கள் -மார்கெரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர்.

Margaret Thatcher | Credits: Network of Enlightened Women

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் - ஹெலன் கெல்லர் மாற்றுத் திறனாளி, சிறந்த எழுத்தாளர்.

Hellen keller | Credits: NPS.gov

வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்- அன்னை தெரசா. சேவையின் உருவம் என உலகமே போற்றும் அற்புத பெண்மணி.

Mother teresa | Credits Wikipedia

மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்க பழகி இருக்கிறார்கள். ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள் - இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர். இரும்பு பெண்மணி.

Indira gandhi | Credits: Deccan Herald

தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது பெண்களுக்கு அழகு - ஔவையார்

Avvaiyar | Credits: Medium

பெண்கள் ஆண்களை விட சிறந்தவளா என்று என்னால் சொல்ல முடியாது; ஆனால் கண்டிப்பாக தாழ்ந்தவள் இல்லை -கோல்டா மியர்.

Golda Meir | Credits: Wikipedia

பெண்கள் தங்களின் சொந்த இருப்பை வரையறுக்க வேண்டும். மற்றவர்களின் வரையறைகளுக்கு அடிபணியக் கூடாது - சிமான் டி பொவ்வார்.

Simone de Beauvoir | Credits: Wikipedia

சிறிது காலம் நம் தலைக்கு மேலே சிறிய கூரையே அமைக்கலாம். மேலும் அங்கே கவனி; உண்மைக்கும், பொய்மைக்கும் இடையில் சிறியதோர் வெற்றிடம் இருக்கிறது - அம்ருதா ப்ரீதம் பஞ்சாபி மொழியில் இலக்கிய நூல்களை எழுதி புகழ் பெற்றவர்.

Amrutha preetam | Credits: Wikipedia

தலைவர்கள் கச்சிதமானவர்களாக இருப்பதை விட நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க முயல வேண்டும் - ஷெரில் சாண்ட்பர்க், சமூக ஊடக ஃபேஸ் புக்கின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீசர்.

Sheryl-Sandberg | Credits: MIT News

சேயாக, தமக்கை, தாரம் தாய் என பாரினில் பெண்களின் பாத்திரங்கள் மகத்தானது. ஒவ்வொருவரும் இன்னும் தடைகளை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கை தன் வசப்படுத்தி எதற்கும் அஞ்சாமல் வெற்றி பெற வேண்டும். பெண் உரிமையும் பற்றி பாதுகாக்கப்பட வேண்டும் -முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

Jayalalitha | Credits: IBG News
Beauty Products
அழகு சாதனப் பொருட்கள்: நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள்!