கிரி கணபதி
தலைக்கு குளிப்பது சாதாரண விஷயம் போல் நமக்குத் தோன்றலாம். ஆனால், அதில் நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள்தான் முடி கொட்டுவதற்கும், வறண்டு போவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றன. அவை என்னென்ன தவறுகள் என்பதை இங்கே பார்ப்போம்.
1. அதிக சூடான தண்ணீரில் தலைக்கு குளிப்பது முடியின் வேர்க்கால்களை முற்றிலுமாக பலவீனமாக்கும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவதே முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2. நிறைய நுரை வர வேண்டும் என அதிக அளவு ஷாம்புவை பயன்படுத்துவது மிகப்பெரிய தவறு. இது தலையில் உள்ள இயற்கையான எண்ணெயை உறிஞ்சி முடியை வறண்டு போகச் செய்யும்.
3. ஷாம்புவை நேரடியாக தலையில் ஊற்றி ஒருபோதும் தேய்க்கக் கூடாது. சிறிதளவு தண்ணீரில் அதை கலந்து நீர்த்துப்போகச் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
4. தினமும் ஷாம்பு போட்டு குளிப்பதால் முடி அதன் பொலிவை இழந்து சீக்கிரம் உடையும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிப்பதே சரியான முறையாகும்.
5. குளித்தவுடன் டவலை வைத்து முடியை வேகமாகத் தேய்த்து துடைக்கக் கூடாது. ஈர முடி மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் அப்படி செய்யும்போது எளிதில் அறுந்துவிடும்.
6. கண்டிஷனரை எப்போதுமே முடியின் நுனிப் பகுதியில் மட்டுமே தடவ வேண்டும். அதைத் தலையின் வேர்ப்பகுதியில் படும்படி தடவினால் முடி கொட்டுதல் உடனடியாக அதிகரிக்கும்.
7. தலைக்கு குளிக்கும் முன் சீப்பால் முடியில் உள்ள சிக்குகளை எடுக்காமல் அப்படியே குளிக்கக் கூடாது. இதனால் குளித்த பின் சிக்குகள் அதிகமாகி நிறைய முடி கொட்டும்.
8. ஷாம்புவை முடியின் வேர்ப்பகுதியில் மட்டுமே மென்மையாகத் தேய்த்து அழுக்கை நீக்க வேண்டும். முடியின் நுனிப்பகுதியில் ஷாம்புவை கடுமையாக தேய்த்தால் முடி வெடிப்புகள் ஏற்படும்.
9. தலைமுடி முழுமையாக காயும் முன்பே கொண்டை போடுவதோ அல்லது இறுக்கமாக பின்னுவதோ கூடாது. ஈர முடி மிகவும் பலவீனமாக இருப்பதால் அது எளிதில் வேரோடு உதிர்ந்து விடும்.
10. உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ற சரியான ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். அதிக ரசாயனங்கள் உள்ள ஷாம்புக்களை தவிர்ப்பது முடிக்கு மிக மிக நல்லது.
தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்க விலையுயர்ந்த பொருட்கள் மட்டும் போதாது. சரியான குளியல் முறையும் அவசியம். தலைக்கு குளிக்கும்போது இந்தத் தவறுகளைத் தவிர்த்து உங்கள் முடியைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.