ஃபேக் ஐலாஷ் இனி தேவையே இல்லை! 14 நாளில் கண் இமை வளர சீக்ரெட்ஸ்!

கிரி கணபதி

கண்களின் அழகை மெருகேற்றுவதில் அடர்த்தியான இமை முடிகளுக்கு எப்போதுமே ஒரு முக்கியப் பங்கு உண்டு. வெறும் இரண்டே வாரங்களில், எந்த செயற்கை ரசாயனங்களும் இல்லாமல் இயற்கையான முறையில் இமை முடிகளை எப்படி வளர்ப்பது என இங்கே பார்ப்போம்.

eye lashes

1. தினமும் இரவில் தூங்கும் முன் சிறிதளவு விளக்கெண்ணெயை இமைகளில் மெதுவாகத் தடவுங்கள். இது முடிகளின் வேர்க்கால்களைத் தூண்டி இமைகளை மிகவும் அடர்த்தியாக வளரச் செய்யும்.

castor oil

2. ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ கண் இமை முடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். ஒரு காட்டன் பஞ்சில் எண்ணெயை நனைத்து இமைகளில் லேசாகத் தடவி மசாஜ் செய்யுங்கள்.

olive oil

3. சர்க்கரை சேர்க்காத கிரீன் டீயை நன்றாகக் காய்ச்சி முழுமையாகக் குளிர வைத்துக்கொள்ளுங்கள். அதைத் தினமும் இமைகளில் தடவி வந்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும்.

Green Tea

4. கண் இமைகள் வறட்சியாக இருந்தால் முடிகள் மிக எளிதாக உடைந்து கொட்டிவிடும். இதற்க்கு வாசலினை இமைகளில் தடவுவது முடிகளை ஈரப்பதத்துடன் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

Vaseline

5. சுத்தமான கற்றாழை ஜெல்லை இமைகளில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் கண் இமை முடிகளின் வளர்ச்சியை மிக வேகமாகத் தூண்டும்.

Aloe Vera Gel

6. சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெயை லேசாகச் சூடாக்கி இமைகளில் தடவி வரலாம். இது முடிகளுக்குத் தேவையான புரதச்சத்தைக் கொடுத்து மிக நீளமாக வளர உதவும்.

Coconut Oil

7. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள பயோட்டின் இமை முடிகளுக்கு மிகப்பெரிய நன்மையைத் தரும். இதை வாரம் ஒருமுறை இமைகளில் தடவிக் கழுவினால் முடி கொட்டுவது முழுமையாகக் கட்டுப்படும்.

Egg White

8. இரவில் தூங்கும் முன் கண் மேக்கப் மற்றும் மஸ்காராவை முழுமையாக அகற்றிவிடுங்கள். கெமிக்கல்களுடன் அப்படியே தூங்குவது இமை முடிகளைப் பலவீனமாக்கி உதிரச் செய்துவிடும்.

Make Up

9. அடிக்கடி கைகளால் கண்களை மிகக் கடுமையாகக் கசக்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்துங்கள். இந்த அதீத அழுத்தம் மென்மையான இமை முடிகளை எளிதில் வேரோடு பிடுங்கிவிடும்.

Eye Rubbing

10. வெளிப்புறப் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு புரதம் நிறைந்த உணவும் முக்கியம். முட்டை, மீன் மற்றும் பாதாம் போன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டால் இமைகள் ஆரோக்கியமாக வளரும்.

Diet

இந்த எளிய இயற்கையான வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி உங்கள் கண்களின் அழகைப் பன்மடங்கு கூட்டிக் கொள்ளுங்கள்.

Eye Lashes
Foods
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததன் ரகசியம்! இந்த 10 பாரம்பரிய பொருட்கள் தான்!