நான்சி மலர்
குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டியது அவசியம். அதிக சூடான நீர் சருமத்தில் உள்ள எண்ணெய்யை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும்.
சோப்பு பயன்படுத்தும் போது கிளிசரின் உள்ள சோப்புகளை தேர்வு செய்வது சிறந்தது. இது குளித்து முடித்த பிறகும் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
குளித்து முடித்து சருமம் ஈரமாக இருக்கும் போதே மாய்ஸ்டரைசர் தடவுவது சருமத்தில் ஈரப்பதத்தை தத்க வைக்க உதவும்.
மாய்ஸ்டரைசரை தேர்வு செய்யும் போது கெட்டியான கிரீம் போன்றவற்றை தேர்வு செய்யவும். லோஷன்கள் தண்ணீரை போன்று இருப்பது சருமத்தை வறட்சியில் இருந்து காக்க பெரிதும் உதவாது.
குளிர்காலத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். புற ஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்கும். குறைந்தது SPF 30 சன் ஸ்கிரீனை பயன்படுத்தவும்.
குளிர்காலத்தில் உதடு வறட்சி ஏற்படுவதை தடுக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது லிப் பாமை பயன்படுத்தவும்.
கை மற்றும் கால்கள் குளிர்காலத்தில் எளிதில் வறட்சியடைந்துவிடும். எனவே, கிரீம் தடவிய பின் கிளவுஸ் மற்றும் சாக்ஸ் போட்டு பாதுகாக்கவும்.
குளிர்காலத்தில் தாகம் எடுப்பது குறைவாக இருக்கும். எனினும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
வைட்டமின் சி மற்றும் Zinc அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது சருமத்தை பாதுகாக்க உதவும்.
முதலில் பருத்தி ஆடைகளை அணியுங்கள், அதற்கு மேல் கம்பளி போன்ற சொரசொரப்பான ஆடைகளை அணியவும். இது சருமத்தில் உரசி எரிச்சல் ஏற்படுவதை தடுக்க உதவும்.