நான்சி மலர்
Blue Pea Flower
1. சங்குப்பூ டீ-யை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒத்தடம் கொடுக்க பருக்கள் மற்றும் அதன் தழும்புகள் குறையும்.
2. சங்குப்பூ கொதிநீரை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி முகத்திற்குப் பயன்படுத்தினால், சருமத் துவாரங்கள் இறுகி புத்துணர்ச்சி கிடைக்கும்.
3. சங்குப்பூ சாற்றை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சித் தடவி வர, கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
4. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சுருக்கங்களைத் தடுத்து, முகத்திற்கு இளமையான பொலிவைத் தருகின்றன.
5. சங்குப்பூக்களைக் கொதிக்க வைத்த தண்ணீரை ஷாம்பு போட்டு குளித்த பின் தலைக்கு ஊற்றி அலசினால், கூந்தல் பளபளப்பாக மாறும்.
6. சங்குப்பூ விழுதுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.
7. சங்குப்பூ சாற்றில் நனைத்த குளிர்ச்சியான பஞ்சை கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க, கருவளையம் மற்றும் கண் சோர்வு மறையும்.
8. சங்குப்பூ இதழ்களை நசுக்கி வெண்ணெயுடன் சேர்த்து உதடுகளில் தடவி வர, உதடுகள் இயற்கையான ரோஜா நிறத்தைப் பெறும்.
9. சங்குப்பூ சாற்றை தேனுடன் கலந்து உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய, கிருமித்தொற்று மற்றும் அரிப்பு குறையும்.
10. சங்குப்பூ மற்றும் நெல்லிக்காய் பொடியைக் கலந்து தலையில் பேக் போட்டு வர, வேர்கள் பலம் பெற்று முடி கொட்டுவது நிற்கும்.