ஆர்.ஜெயலட்சுமி
கூந்தலை அலசும் போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால் கூந்தல் பளபளப்பாகும்.
இரவில் தூங்கச் செல்லும் முன் கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்ரைசரை கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும் நல்ல நிறமாகவும் இருக்கும்.
பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவை கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.
கை முட்டிகளில் உள்ள கருமையை நீங்க எலுமிச்சம் பழத்தின் சாறை தேய்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால் பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.
கண்ணிமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட்டு தூங்கினால் கண் இமை கருப்பாக நீண்டு வளரும்.
குளித்தபின் கைகளில் கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.
உதடுகளில் பாலாடையை தடவி வந்தால் வறண்டு போன உதடுகள் மென்மையாக மாறும்.
களைப்படைந்த கால்களை மிதமான உப்பு கலந்த சுடுநீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பின் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி விட்டு தூங்கினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றை கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட வேண்டும். இதனை தினமும் கூந்தலுக்கு தடவி வர கருமையாக பளபளப்பாக மாறும்.
தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும் முகம் அழகாகவும் உடல் பளபளப்பாகவும் இருக்கும்.
முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும் துத்தி இலையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி பின் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
தினமும் இரவில் படுக்க போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு எலுமிச்சை சாறு ஷாம்பு போட்டு பாதங்களை பத்து நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும் பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்ய வேண்டும் பாதங்கள் அழகாக இருக்கும்.
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படும் இதை தவிர்க்க கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தைச் சுற்றி பூசி இருபது நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் பிறகு குளிக்க வேண்டும் இப்படி தினமும் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருவளையம் மறைந்து விடும்.
பழுத்த வாழைப்பழத்தை பாலில் கலந்து முகத்தில் பூச வேண்டும் முகம் பளபளப்பாக இருக்கும்.