ராஜமருதவேல்
தினமும் கற்றாழையின் சாற்றை முகம் மற்றும் கைகளில் தடவிக் கொண்டு வெளியில் சென்று வரலாம். கற்றாழை சாறு புற ஊதாக்கதிர்களை தடுக்கும்.
கற்றாழை சருமத்தை உலர விடாமல் பாதுகாக்கும். இது குளிர்ச்சி என்பதால் குளிர் காலங்களில் இதை பயன்படுத்த வேண்டாம்.
கெட்டியான தயிரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து முகம், முன் மற்றும் பின் கழுத்தில் தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து பின்னர் கழுவி விடலாம்.
எலுமிச்சை சாறுக்கு பதில் ஒரு நாள் கஸ்தூரி மஞ்சள் அல்லது சந்தனம் அல்லது கசகசா அரைத்தும், மாற்றி மாற்றி தயிரில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
கண் கருவளையம் மறைய உருளைக் கிழங்கு சாற்றுடன் ஒரு ஸ்பூன் அரிசிமாவு கலந்து பூசி வந்தால், கரு வளையம் மறையும்.
உதடுகளின் வெடிப்பு போக, சீனியுடன் சிறிது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரத்தில், இரண்டு முறை தடவி வந்தால் வெடிப்புகள் மறையும்.
புருவங்களுக்கு தினமும் விளக்கெண்ணெய் தேய்க்க முடி அடர்த்தியாக வளரும். இதை தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.
இரவு படுக்கும் முன் கடலைமாவு கொண்டு முகத்தை கழுவி விட்டு ,தேங்காய் எண்ணெயை ஒரு துளி எடுத்து முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இதனால் முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் .
இரவில் கைகளுக்கு பாதாம் எண்ணெய் தடவிக் கொண்டு படுத்தால், கைகளில் உள்ள கருமைகள் மறையும் .
சந்தையில் விற்பனை ஆகும் ஆயுர்வேத மூலிகைகள் கொண்ட எண்ணெயை தலை முடிக்கு தடவுவதை விட, உண்மையான தேங்காய் எண்ணெயை தினசரி தடவி வந்தாலே முடி நன்றாக வளரும்.
உண்மையான தேங்காய் எண்ணெயை கண்டறிவது எளிது. பிரிட்ஜில் ஒரு மணி நேரம் தேங்காய் எண்ணெயை வைத்தால் போதும். அது நெய் போல இறுகி விடும். எண்ணெயாகவே இருந்தால் அது போலி.
பீட்ரூட் சாறு எடுத்து கன்னத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து விட்டு சோப் போடாமல் முகத்தை கழுவ கன்னம் சிவப்பாக பளபளவென்று இருக்கும்.
அரிசி களைந்த தண்ணீரில் முகம் கழுவினால் முகம் சீக்கிரம் பொலிவு பெறும். அரிசி தண்ணீரில் கோஜிக் ஆசிட் உள்ளது. இது சருமத்தை வெண்மையாக்க உதவும். தாய்லாந்து பெண்களின் பாரம்பரியமிக்க சரும பராமரிப்பு முறை இது.