நவராத்திரி கொலு டிப்ஸ்!

எஸ்.ராஜம்

மரப்பாச்சி மற்றும் மர பொம்மைகளை வார்னிஷ் அடித்து வைத்தால் புதிது போல் பளபளக்கும்.

Navaratri Golu tips | Imge Credit: Amazon

நவராத்திரி கொலுவின் போது பிளாஸ்டிக் தோரணங்களை தவிர்த்து விட்டு மாவிலை தோரணம் கட்டலாம். அது மங்களகரமானது மட்டுமல்ல கிருமிகளை விரட்டக் கூடியதும் ஆகும்.

Navaratri Golu tips

பொம்மைகளை பெட்டியில் இருந்து எடுத்ததும் துணியால் தூசி போக துடைத்து விட்டு பஞ்சில் மண்ணெண்ணெய் தொட்டு எடுத்து சுத்தம் செய்யலாம். பிறகு விபூதி தடவி துடைத்து விட்டால் பளிச்சென்று இருக்கும்.

Navaratri Golu tips | Imge credit: pinterest

தரையில் ஜமுக்காளத்தை விரித்து மணலை பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது சுலபம்.

Navaratri Golu tips | Imge credit: Wikimedia commons

கொலு தொடங்க ஒரு வாரம் முன்பு சிறு மண் தொட்டிகள், கிண்ணங்களில் மண் நிரப்பி நெல், வெந்தயம், மல்லி, கம்பு போன்றவற்றை ஊன்றி வைத்தால் செடிகள் வளர்ந்து விடும். பார்க்கில் ஆங்காங்கே வைக்கலாம்.

Navaratri Golu tips | Imge credit: Sulekha.com Indiapulse

பச்சை வண்ணப் பொடியை சீராக தூவி புல்வெளி உருவாக்கலாம். ரோடு போட மணலில் கருப்பு நிற இங்க் கலந்தால் தார் ரோடு போல இருக்கும். அல்லது கருப்பு நிற காகிதத்தை கத்தரித்து ரோடு அமைக்கலாம்.

Navaratri Golu tips | Imge credit: Lakshmi sharath

மணல்வெளியில் கிராமம், கிணறு போன்றவற்றை அமைத்து பழம்பெருமை காட்டலாம். படிகளில் பொம்மைகளை அடுக்கும் முன் படிகளை சரி பார்க்கவும். மேல் படிகளில் இருந்து பொம்மைகளை அடுக்கவும்.

Navaratri Golu tips | Imge credit: pinterest

சாம்பிராணி புகை, கற்பூரம் இவற்றை படிகளின் அருகில் காட்டினால் பொம்மைகளின் மேல் புகைபடியும். படிகளின் மேல் விரித்துள்ள துணியில் தீப்பிடிக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தூரத்தில் இருந்து காட்டுவது நல்லது.

Navaratri Golu tips | Imge credit: Polka junction

பார்க்கில் வைக்கும் செடிகளில் கடுகும், எள்ளும் வைப்பதை தவிர்க்கவும் அவை நற்காரியங்களுக்கு உகந்தவை அல்ல. நெல், கேழ்வரகு, வெந்தயம், மல்லி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Navaratri Golu tips | Imge credit: Pinterest

நவராத்திரியின் போது கொலு பொம்மைகள் வாங்குவது நம் சம்பிரதாயம். கொலு வைக்கும் கோயில்களுக்கும் பொம்மைகள் வாங்கித் தரலாம்.

Navaratri Golu tips | Imge credit: Pinterest

கொலு பார்க்க வருபவர்களுக்கு ஒரு பொம்மையாவது தாம்பூலத்துடன் பரிசாக தரலாம்.

Navaratri Golu tips | Imge credit: Amazon.in

கொலு முடிந்ததும் பொம்மைகளை பருத்தித் துணி அல்லது செய்தித்தாள்களில் சுற்றி வைத்தால் அவற்றின் நிறம் மங்காமல் இருக்கும்.

Navaratri Golu tips | Imge credit: meesho

அட்டைப் பெட்டிகளில் பொம்மைகளை எடுத்து வைக்கும் பொழுது அதில் என்ன பொம்மைகள் உள்ளன என்பதை வெளிப்புறத்தில் எழுதி வைக்கவும்.

Navaratri Golu tips | Imge credit: Amazon.in

மலை செய்ய ஒரு பானையை கவிழ்த்து மண்ணால் மூடினால் வேலை சுலபம் ஆகும். மண் அல்லது மணலும் குறைவாக செலவாகும்.

Navaratri Golu tips | Imge credit: iKolam

நவராத்திரி பூஜையின் போது எந்த நைவேத்தியத்தையும் கொதிக்க கொதிக்க வைப்பது சரியல்ல. பதமான சூட்டில் இருக்கும் போது கிண்ணம் அல்லது தட்டில் சிறிதளவு வைக்காமல், முழுவதுமாக வைக்க வேண்டும்.

Navaratri Golu tips | Imge credit: Traditional Cooking south india
Bhagat Singh | Img Credit: Pinterest
பகத் சிங் பொன்மொழிகள்!