ஒரே வாரம்... எண்ணெய் தேய்க்கும் முறை ஒன்றை மாற்றினால் போதும், முடி அடர்த்தியா வளரும்!

நான்சி மலர்

Haircare

1. அழுக்கு மற்றும் பிசுபிசுப்புள்ள முடி உச்சந்தலையில் உள்ள துவாரங்களை அடைத்து முடி உதிர்வை அதிகரிக்கும். எப்போதும் சுத்தமான, காய்ந்த தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்.

Haircare | Gemini image

2. குளிர்ந்த எண்ணெயை விட, வெதுவெதுப்பாகச் சூடேற்றப்பட்ட எண்ணெய் உச்சந்தலையில் எளிதில் ஊடுருவும்.

Haircare | Gemini image

3. எண்ணெய் தேய்ப்பதன் முக்கிய நோக்கமே உச்சந்தலைக்கு (Scalp) ஊட்டச்சத்து அளிப்பதுதான். நுனி முடியை விட உச்சந்தலையில் தடவுவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Haircare | Gemini image

4. அளவுக்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால், அதை எடுக்க அதிக ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும். இது முடியை மேலும் வறட்சியாக்கும்.

Haircare | Gemini image

5. விரல் நகங்களால் தேய்த்தால் உச்சந்தலையில் காயம் ஏற்படும். விரல் நுனிகளின் மென்மையான பகுதியால் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும்.

Haircare | Gemini image

6. சொரசொரவென வேகமாகத் தேய்ப்பது முடியின் வேர்களைப் பலவீனப்படுத்தும். வட்ட வடிவில் (Circular motion) மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

Haircare | Gemini image

7. எண்ணெய் தேய்த்தவுடன் முடியின் வேர்கள் பலவீனமாக இருக்கும். அப்போது சீப்பால் சீவினால் முடி அதிகமாக உதிரும்.

Haircare | Gemini image

8. இரவு முழுவதும் எண்ணெய் வைத்தால் தூசி படிவதோடு, பொடுகுத் தொல்லையும் அதிகரிக்கும். 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் ஊறவைத்தாலே போதுமானது.

Haircare | Gemini image

9. எண்ணெய் தேய்த்த பிறகு முடியை இறுக்கமாகக் கட்டினால் வேர்க்கால்கள் பலமிழந்து முடி கொட்டும். தளர்த்தியாகக் கட்ட வேண்டும்.

Haircare | Gemini image

10. வெறும் குளிர்ந்த நீரால் அலசினால் பிசுபிசுப்பு போகாது. மிதமான வெந்நீரையும் (Lukewarm water), வீரியம் குறைந்த ஷாம்பையும் (Mild shampoo) பயன்படுத்த வேண்டும்.

Haircare | Gemini image
Trending hairstyles | Gemini image
ஷார்ட் ஹேரா? லாங் ஹேரா? எந்த முடிக்கும் பொருந்தும் 10 மேஜிக் ஹேர்ஸ்டைல் யோசனைகள்!