வெயிலில் அதிகம் சுற்றும் ஆண்களா நீங்கள்? முகம் கறுத்துப் போகாமல் இருக்க இதோ 10 'மாஸான' டிப்ஸ்!

நான்சி மலர்

1/10. நீங்கள் அதிக நேரம் வெளியில் இருப்பதால், சாதாரண சன்ஸ்கிரீன் போதாது. SPF 50+ மற்றும் PA+++ குறியீடு உள்ள சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுங்கள்.

sunscreen

2/10. வெயிலில் சுற்றுவதால் முகம், கை, கழுத்து கறுத்துப் போகும். வாரம் இருமுறை தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேக் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

tan removal lemon juice and curd

3/10. 'Face Wipes' கொண்டு அவ்வப்போது முகத்தைத் துடைப்பது புத்துணர்ச்சி தருவதோடு, அழுக்கு துளைகளுக்குள் செல்வதைத் தடுக்கும்.

Face Wipes

4/10. வெளியே சென்று வந்தவுடன் ஐஸ் வாட்டரில் முகம் கழுவுங்கள். இது சருமத் துளைகளை (Pores) சுருக்கி, அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தும்.

ice face wash

5/10. ஹெல்மெட் அல்லது தொப்பி அணிவதற்கு முன் ஒரு மெல்லிய பருத்தித் துணியைத் தலையில் கட்டிக்கொள்வது வியர்வையை உறிஞ்ச உதவும்.

helmet

6/10. அதிக வெயில் கண்களைச் சிவப்பாக்கும். வெளியே செல்லும்போது தரமான UV Protection Sunglasses அணியுங்கள்.

sunglass

7/10. வெயிலில் அலையும்போது உடல் சீக்கிரம் சோர்வடையும். தண்ணீர் மட்டும் குடிக்காமல், இடையில் இளநீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள்.

coconut water

8/10. தொடர்ந்து ஷூ அணிந்து நடப்பவர்களுக்குப் பாதங்களில் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படலாம். வீட்டிற்கு வந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் (epsom salt) கால்களைச் சிறிது நேரம் வைத்திருந்து கழுவுங்கள்.

wash feet

9/10. வெயிலில் அலையும்போது கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவும் அது வெப்பத்தை ஈர்க்கும். வெளிர் நிறப் பருத்தி Linen/Cotton சட்டைகளை அணியுங்கள்.

cotton shirt

10/10. வெயிலால் சருமம் எரிச்சலாகவோ அல்லது சிவந்தோ இருந்தால் (Sunburn), கற்றாழை ஜெல் தடவுங்கள். இது சருமத்திற்கு உடனடி குளிர்ச்சியை தரும்.

aloe Vera gel
10 items that will bring you money | credit AI image
அதிர்ஷ்ட தேவதையை வீட்டிற்குள் அழைக்கும 10 ரகசிய பொருட்கள்!