மெட் காலா 2026: வாயடைத்துப் போகச் செய்யும் டாப் 10 விசித்திர ஆடைகள்!

நான்சி மலர்

நியூயார்க்கில் மே 4, 2026 நடைபெற்ற Met Gala 2026 உலகப்புகழ் பெற்ற ஃபேஷன் திருவிழாவாக அமைந்தது. இந்த ஆண்டின் கருப்பொருள் 'Fashion is Art'.

met gala 2026 | credit: vogue

1/10. இந்தியாவின் ஈஷா அம்பானி, கௌரவ் குப்தா வடிவமைத்த தங்க நிறத் திசு சேலையில் ஜொலித்தார். இதில் 1,800 கேரட் வைரங்கள், மரகதங்கள் மற்றும் பாரம்பரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

Isha ambani | credit: instyle

2/10. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மெட் காலா திரும்பிய பீயான்ஸ், ஆலிவர் ரூஸ்டிங் வடிவமைத்த 'ஸ்கெலட்டன் கவுன்' (Skeleton Gown) அணிந்திருந்தார்.

Beyonce | credit: pure wow

3/10. கரண் ஜோஹர் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆடையை அணிந்திருந்தார்.

Karan johar | credit: vogue india

4/10. ஒலிம்பிக் வீராங்கனை எலீன் கு, சுமார் 15,000 கண்ணாடி குமிழிகள் (Glass Bubbles) கொண்டு உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்.

Eileen Ku | credit: page six

5/10.1 டாலர் நோட்டு போன்ற தோற்றமுடைய லெதர் மாஸ்க் மற்றும் டல்லே கவுன் அணிந்து சாரா பால்சன் அதிகாரத்தின் ஏற்றத்தாழ்வு போன்ற சமூகக் கருத்தை முன்வைத்தார்.

Sarah Paulson | credit: Reddit

6/10. ஸ்கியாபரெல்லி வடிவமைத்த ஆடையை கைலி அணிந்திருந்தார். இது அவரது உடல்வாகிற்கு ஏற்றவாறு செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் போன்ற தோற்றத்தைத் தந்தது.

Kylie jenner | credit: vogue

7/10. இளவரசி கௌரவி குமாரி தனது பாட்டி மகாராணி காயத்ரி தேவியின் நினைவாக முத்துக்கள் மற்றும் ஷிஃபான் சேலை கொண்டு உருவாக்கப்பட்ட கவுனை அணிந்து பாரம்பரியத்தை பறைசாற்றினார்

Princess Gauravi Kumari | credit: vogue india

8/10. இந்தியப் பாடகி அனன்யா பிர்லா, மிகவும் தைரியமான மெட்டாலிக் மாஸ்க் மற்றும் கலைநயம் மிக்க ஆடை அணிந்து உலகக் கவனத்தை ஈர்த்தார்.

Ananya Birla | credit: outlook india

9/10. 'Gap Studio' வடிவமைத்த வெள்ளை நிறச் சிம்பிளான ஆடையை கெண்டல் அணிந்திருந்தார்.

Kendell jenner | credit: Reddit

10/10. ஜெய்ப்பூர் மகாராஜா பத்மநாப் சிங், ஜர்தோசி மற்றும் ஆரி வேலைப்பாடுகள் நிறைந்த 'புல்கர் கோட்' அணிந்து இந்தியக் கைவினைத் திறனை உலகிற்குக் காட்டினார்.

Maharaja Padmanabh Singh | credit: Vogue India
summer throat infection
வெயிலால் வரும் தொண்டை தொற்று - விரட்ட 10 'மாஸ்டர் பிளான்ஸ்'... இதோ உங்களுக்காக!