வெயிலால் வரும் தொண்டை தொற்று - விரட்ட 10 'மாஸ்டர் பிளான்ஸ்'... இதோ உங்களுக்காக!

நான்சி மலர்

கோடை காலத்தில், வெப்பம் மற்றும் காற்றில் இருக்கும் தூசு காரணமாகத் தொண்டைதொற்று (Throat Infection) ஏற்படுவது இயல்பானது. இதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள 10 எளிய வழிகள்.

Throat Infection

1/10. வெயிலில் இருந்து வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பது தொண்டையில் உள்ள திசுக்களைப் பாதித்து வலியை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக மண்பானை தண்ணீரை அருந்துவது சிறந்தது.

pot water

2/10. தொண்டையில் லேசான அரிப்பு அல்லது வலி தெரிந்தால், மிதமான சுடுநீரில் கல் உப்பு கலந்து காலை மற்றும் இரவு நேரங்களில் கொப்பளிக்கவும். இது கிருமிகளை அழிக்கும்.

rock salt

3/10. தொண்டை வறண்டு போகும்போது கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். எனவே, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

drinking water

4/10. இரவு முழுவதும் ஏசி காற்றில் தூங்கும்போது தொண்டை வறட்சி ஏற்படும். ஏசியின் வெப்பநிலையை 24°C முதல் 26°C வரை வைப்பது ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.

air conditioner

5/10. சாலையோரக் கடைகளில் விற்கப்படும் ஜூஸ் வகைகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் மற்றும் தண்ணீர் சுத்தமாக இருக்காது. இதுவே பல நேரங்களில் தொண்டை தொற்றுக்கு முக்கிய காரணமாகிறது.

roadside juices

6/10. இரவு உறங்கும் முன் மிதமான சூட்டில் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் கலந்து குடிக்கவும். இது இயற்கையான கிருமிநாசினியாகச் செயல்படும்.

turmeric milk

7/10. அதிக காரம் மற்றும் எண்ணெய்ப் பலகாரங்கள் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்பது நல்லது.

oily foods

8/10. மூக்கடைப்பு அல்லது தொண்டை கரகரப்பு இருந்தால், வாரத்திற்கு இருமுறை வெறும் நீரை மட்டும் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். இது சுவாசப் பாதையைச் சீராக்கும்.

inhale

9/10. நமது கைகளின் மூலமாகவே வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் வாய்க்குச் சென்று தொண்டை தொற்றை உண்டாக்குகின்றன. சாப்பிடுவதற்கு முன்பும், வெளியே சென்று வந்த பின்னும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.

wash hands

10/10. உடல் வெப்பம் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. கோடை கால மதிய வேளைகளில் அதிக உழைப்பைத் தவிர்த்து, போதுமான ஓய்வு எடுப்பது உடலைத் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும்.

resting
white jamun | credit amazon.in
வெளுத்துக் கட்டும் 'வெள்ளை நாவல்'! அதன் 'WOW' ரகசியங்கள்!