நான்சி மலர்
இன்றைய இளைஞர்கள் மத்தியில் மேக்கப் என்பது தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு கலையாக மாறிவிட்டது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் டாப் 10 மேக்கப் ட்ரெண்ட்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
Clean Makeup Look இது அதிகமான மேக்கப் போடாமல், இயற்கையாகவே சருமம் ஜொலிப்பது போன்ற தோற்றத்தைக் கொடுப்பது.
Glass Skin கொரியன் அழகுக் கலை மூலம் பரவிய இந்த ட்ரெண்ட், சருமத்தை கண்ணாடி போல மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் காட்டுவதாகும்.
Graphic Eyeliner கண்ணைச் சுற்றி விசித்திரமான வடிவங்கள், நியான் நிறங்கள் மற்றும் கலைநயமிக்க கோடுகளை வரைவது.
Foxy Eyes கண்களை ஒரு நரியின் கண்ணைப் போல நீளமாகவும், மேல்நோக்கி இழுத்தது போலவும் காட்டும் மேக்கப்.
Blush Overload கன்னம், மூக்கு நுனி மற்றும் கண்களின் ஓரங்கள் வரை பிங்க் அல்லது பீச் நிறத்தைப் படரவிடுவது ட்ரெண்டாகி உள்ளது.
Laminated Brows அடர்த்தியான மற்றும் மேல்நோக்கித் தூக்கிவிடப்பட்ட புருவங்கள் இப்போது ஃபேஷன்.
Ombre Lips இரண்டு வெவ்வேறு நிற லிப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்தி உதட்டின் ஓரத்தில் ஒரு நிறமும், நடுவில் ஒரு நிறமும் பூசி ஒரு நிழல் போன்ற தோற்றத்தைக் கொண்டு வருவது.
Skinimalism மிகக் குறைந்த மேக்கப் போடுவதாகும். டின்டட் மாய்ஸ்சுரைசர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
Coquette Makeup மிகவும் மென்மையான Feminine தோற்றத்தைக் கொடுக்கும் மேக்கப்.
Fake Freckles, மூக்கின் மேல் செயற்கையாகப் புள்ளிகள் வைப்பது ஒரு அழகியல் ட்ரெண்டாக மாறியுள்ளது.