கல்பனா ராஜகோபால்
உணவுப் பொருட்களுக்கு மட்டும் அல்ல, தினசரி பயன்படும் பொருட்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. சரியான நேரத்தில் மாற்றுவது (Home cleaning) ஆரோக்கியத்திற்கு அவசியம்.
தலை வாரும் சீப்புகள், மாதம் 1 முறை சுடுநீரில் liquid detergent இல் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
பல் துலக்கும் பிரஷ் ஈரமாக இருப்பதால், கிருமிகள் சேரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
முகம்/கை துடைக்கும் துவாலைகள் இவை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் பூஞ்சையால் கருப்பு திட்டுகள் உருவாகும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
அதிக வியர்வை காரணமாக உள்ளாடைகளில் பாக்டீரியா, பூஞ்சை வளர்கிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
பவுடர் பஃப்/கைக்குட்டைகள் அடிக்கடி உபயோகிப்பதால் அதிக கிருமிகள் சேரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
குளியல் துவாலைகள் பூஞ்சை வளராமல் தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.
தினசரி காலணிகள்: அதிக நாள் உபயோகிக்கும் காலணிகள், பாதம் வலி, வெடிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கால்மிதிகள்(Mats) அழுக்கு, தூசி பிடித்து கிருமிகளை உள்ளே கொண்டு செல்லும். வாரம் ஒரு முறை சுடுநீரில் ஊற வைத்து அலசி, வெயிலில் உலர்த்தி பயன்படுத்த வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை புதியதாக மாற்றவும்.
மீன் தொட்டி: மாதம் ஒரு முறை தண்ணீரை மாற்றவும், வாடை ஏற்படாமல்.
பூந்தொட்டிகள்: வாரம் ஒரு முறை காய்ந்த இலைகளை அகற்றுதல் நலம்.
திரைச்சீலைகள்: மாதம் ஒரு முறை Blower-ஆல் தூசி அகற்றி சுத்தம் செய்யவும்.
மின் விசிறியை Brush கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் தூசி காற்றில் கலந்து சுவாசக் கோளாறு ஏற்படலாம்.
நாம் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களை தினமும் வெந்நீரில் சுத்தம் செய்யவும். 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.
கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் Brush-களை 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
Floor cleaning Mop ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி வைக்கவும். 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
Table Mats: உணவு மேசையில் பயன்படுத்தும் இவை வாரம் ஒரு முறை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.