'Low Budget Glow!' நடிகைகளின் பியூட்டி சீக்ரெட் அவுட்!

நான்சி மலர்

1/11. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் தங்களின் அழகான தோற்றத்தைப் பராமரிக்கப் பின்பற்றும் சில எளிய மற்றும் இயற்கையான அழகு குறிப்புகள்.

Tamannaah Bhatia | Img Credit: The Siasat Daily

2/11. நயன்தாரா தனது சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், தினமும் இளநீர் குடிப்பது அவரது வழக்கம்.Trisha

Nayanthara | Credits: Britannica

3/11. திரிஷா தனது சருமத்தின் மென்மைக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார். மேலும், Aloe Vera ஜெல்லை முகத்தில் தடவுவதை விரும்புகிறார்.

Trisha Krishnan | Credits: Pinterest

4/11. சமந்தா தனது சருமத்தைச் சுத்தமாக வைத்திருக்க Double Cleansing முறையைப் பின்பற்றுகிறார். சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க எப்போதும் Sheet Masks பயன்படுத்துவதை விரும்புகிறார்.

Samantha Ruth Prabhu | Credits: interest

5/11. ஜோதிகா அவர் முகத்திற்கு கடலை மாவு மற்றும் தயிர் கலந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துகிறார். இது சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி மென்மையாக்க உதவுகிறது.

Jyothika | Credits: IMDb

6/11. கீர்த்தி சுரேஷ் தனது கூந்தல் மற்றும் சரும பராமரிப்பிற்கு ஆமணக்கு எண்ணெய் (Castor Oil) பயன்படுத்துகிறார்.

Keerthy suresh | Credits: Keerthy suresh photos

7/11. சாய் பல்லவி தனது சரும பொலிவுக்கு காரணமாக அதிக அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் பழங்களை அதிகம் உண்பதையே ரகசியமாகக் கூறுகிறார்.

Sai Pallavi | Credits: Unique threads sarees

8/11. தமன்னா தனது சருமத்தைப் பராமரிக்க சந்தனம் மற்றும் வேப்பிலை பொடியைப் பயன்படுத்துகிறார். இது முகப்பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

Tamannaah Bhatia | Credits: Pinterest

9/11. காஜல் தனது முகத்தின் பொலிவிற்கு முல்தானி மெட்டி (Multani Mitti) பயன்படுத்துகிறார். இது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை நீக்கி முகத்தைப் பளிச்சென்று மாற்றும்.

Kajal Aggarwal | Img Credit: Black Hat Talent Solutions

10/11. ஸ்ருதி ஹாசன் தனது சருமத்திற்கு பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஸ்க்ரப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். இது சருமத்தைச் சுத்தப்படுத்த உதவுகிறது.

Shruti Haasan | Credits: Pinterest

11/11. ஐஸ்வர்யா ராஜேஷ் அவர் முகத்திற்கு பாலாடை மற்றும் தேன் கலந்த கலவையைத் தடவி ஊறவைத்து குளிப்பார். இது வறண்ட சருமத்தை நீக்கி ஈரப்பதம் அளிக்கும்.

Aishwarya rajesh | Credits: Telugu cinema
Melon fruit health benefits in summer
உடல் குளிர்ச்சிக்கு முலாம் பழமே ராஜா! மலிவான விலையில் மாபெரும் சத்துகள்!