இந்தியாவின் பாரம்பரிய புடவை கட்டும் முறைகள்!

பாரதி

இந்தியா ஒரு பரந்த நாடு என்பதால், இங்கு ஏராளமான பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றைப் பார்க்க முடியும். இந்தியாவின் பெருமையாகக் கருதப்படுவது புடவை. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒரு சமூகத்திற்கும் ஏற்றவாரு பெண்கள் அழகழகாகவும், பல விதமாகவும் சேலைகளை கட்டுவார்கள்.

Ancient Saree Drapes

Seedha pallu: குஜராத், உத்தரபிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெண்கள் பாரம்பரியமாகக் கட்டும் இந்த முறைக்கு பெயர் Seedha pallu. குஜராத் பாரம்பரிய சேலை கட்டும் முறையை பல வட மாநிலத்து பெண்களும் கட்ட விரும்புகிறார்கள். பொதுவாக பனராசி மற்றும் காஞ்சிவரம் போன்ற சேலைகளில் இந்த மடிப்பு கட்டப்படுகிறது.

Seedha pallu

Nivi: ஆந்திராவின் பாரம்பரிய சேலை கட்டும் முறையான இது, தற்போது இந்தியா முழுவதும் அனைத்து பெண்களும் கட்டும் மாடர்ன் ஸ்டைலாக இருந்து வருகிறது. ஏனெனில், பெண்கள் இந்த முறையில் புடவை கட்டுவதால், வசதியாக இருப்பதாக உணர்கிறார்கள்.

Nivi

Namboothiri drape: கேரளாவின் பாரம்பரிய புடவை கட்டும் முறையான இதனை, Mundum Neriyathum Saree Drape என்றும், Kasavu Saree என்றும் அழைக்கிறார்கள். வெள்ளை அல்லது க்ரீம் கலர் புடவையில், பார்டர் மட்டும் கோல்ட் நிறத்திலோ அல்லது வேறு நிறங்களிலோ இருக்கும். மார்பை சுற்றி கட்டப்படும் இந்தப் புடவை கட்டும் முறையை, பெண்கள் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் இப்போதும் கட்டுகின்றனர்.

Namboothiri drape

Nauvari drape: 9 யார்டுகளைக் கொண்ட புடவைகளை பயன்படுத்திக் கட்டப்படும் இந்த முறை, மகாராஷ்திராவின் புடவை கட்டும்  முறையாகும். அந்த காலத்தில் பெண்கள் போருக்கு செல்லவும், மணலில் வேலைகள் செய்வதற்கும் இந்த மடிப்பு வசதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Nauvari drape

Parsi drape: குஜராத், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் கட்டப்படும் முறைக்கு பார்சி என்று பெயர். பின்னிருந்து மடிப்பு எடுத்து முன் விடப்படும் இந்த முறை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் புகழ்பெற்றதாகும்.

Parsi drape

Madisaru drape: மடிசார் அல்லது கோசவம் என்றழைக்கப்படும் இந்த மடிப்பு தமிழ்நாட்டில் பிராமணர்கள் கட்டும் ஒரு முறையாகும். கடந்த 2nd Bc காலத்திலிருந்து கட்டப்படும் இந்த புடவையும் 9 யார்டுகளை கொண்டதாகும்.

Madisaru drape

Coorgi drape: கர்நாடகாவின் சேலை கட்டும் முறையாக இருந்துவரும் இது, கூர்க் பெண்களிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. அவர்கள் மலை ஏறும்போதும் இறங்கும்போதும் இந்த மடிப்பு முறை மிகவும் வசதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்போதும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு காஞ்சிவரம் புடவையில் இந்த முறையை கட்டுகிறார்கள்.

Coorgi drape

Aatpoure drape: மேற்கு வங்க பெண்கள் கட்டும் இந்த முறையில், அவர்களின் இரண்டு தோல்களிலும் மடிப்பு எடுத்து முன் மற்றும் பின் தொங்க விட்டிருப்பார்கள். சிவப்பு பார்டர் கொண்ட வெள்ளை புடவை அணிந்து துர்கா கோவிலுக்கு செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

Aatpoure drape

Mekhala chadoe drape: அசாம் பெண்கள் பல ஆண்டுகளாக இந்த முறையை தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர். கீழே மடிப்பு Criss Cross ஆகவும், மேலே சேலை வடிவிலும் இருக்கும் இந்த முறை, இன்றைய பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

Mekhala chadoe drape
Jim Corbett National Park