பாரதி
Anarkali Kurti: முகலாய காலத்தின் டிசைன்களைக் கொண்டிருக்கும் இந்த குர்தியை, திருமணம் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் அணியலாம்.
Straight Cut Kurti: பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் இந்த குர்தி, ஜீன்ஸ், பலாசோ, ஜெக்கின்ஸ், லெக்கின்ஸ் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
Asymmetrical kurti: இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் குர்தி இது. பார்டி போன்ற நிகழ்வுகளுக்கு அணிந்து செல்லலாம்.
Kaftan Style Kurti: தளர்வாக இருக்கும் இந்தக் குர்தியை கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அணிந்து செல்லலாம்.
Shirt Collar Kurti: காலர் மற்றும் பட்டன்கள் இருக்கும் இந்தக் குர்தியை நீங்கள் அலுவலகத்திற்கும் அணிந்துச் செல்லலாம். இந்தக் குர்திக்கு ஜீன்ஸ் அணிவது அழகாக இருக்கும்.
Tail Cut kurti set: கீழே அடுக்கடுக்காக இருக்கும் இந்தக் குர்தியை டோத்தி பாண்ட் மீது அணிந்தால் சூப்பர் லுக் தரும். அதேபோல் ஜாக்கெட் அணிவது நியூ ட்ரெண்டாக இருக்கும்.
Dhoti Style Kurtis: மேலே இறுக்கமாகவும் கீழே பட்டியாலா போன்ற வடிவமைப்புடன் இருக்கும் இந்த குர்திக்கு, துப்பட்டா அணிந்தாலும் சிறப்பாக இருக்கும்.
Side Slit Kurti: மாடர்ன் லுக் வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த குர்தியை தேர்ந்தெடுக்கலாம். ஹைலைட்டாகவும், மாடர்னாகவும் இருக்கும்.
Floor Length/Gown style Kurti: இது கால் வரை இருக்கும் ஒரு கவுன் போன்ற குர்தியாகும். இந்தக் குர்திக்கு எளிதான நகைகள் போட்டால் சிறப்பு.
Chikankari Kurti: இந்தக் குர்தியின் தனித்துவமே அதன் எம்பிராய்டரிதான். லைட் நிறத்தில் கீழாடை அணிந்தால், அனைத்து நிகழ்வுகளுக்கும் அணிந்துக் கொள்ளலாம்.
Angrakha Kurti: இந்தக் குர்தியின் ப்ரிண்டே எடுப்பாக இருக்கும். ஜீன்ஸ் அல்லது லெக்கின்ஸ் அணிந்து இந்தக் குர்தியை அணியலாம்.
Layered Kurti: இது மாறுப்பட்ட நிறங்கள் மற்றும் பேட்டர்ன்களைக் கொண்டு அடுக்கடுக்காக இருக்கும். இதற்கு எளிமையான மாடலில் பேண்ட் அணிந்தாலே நன்றாக இருக்கும்.
Flared Kurti: ஆலியாபட் சுடிதார் போலவே இருக்கும் இந்தக் குர்தி, இப்போது பலரால் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது.
Tie&dye Kurti: துடிப்பான நிறங்கள் மற்றும் வேடிக்கையான பேட்டர்ன்களைக் கொண்டிருக்கும் இந்தக் குர்தி, தனித்துவமான ரசனைக் கொண்டவர்களுக்கு மட்டுமே பிடிக்கும்.
Bandhani kurti: குஜராத் மற்றும் ராஜஸ்தான் டிஸைன் ஸ்டைல்களில் இருக்கும் இந்தக் குர்தியை ஸ்பெஷலான நிகழ்வுகளுக்குக்கூட அணியலாம்.
இந்த 15 குர்திஸ் பற்றி தெரிந்துக்கொண்டாலே, உங்களுக்கு ஏற்றக் குர்தியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதாகிவிடும். அதேபோல் எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எந்த வகையான குர்தி தேர்ந்தெடுப்பது என்பதையும் எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.