சீர்மிகு ஆலயங்கள்; சிறப்புமிகு பிரசாதங்கள்!

ஆர்.ஜெயலெட்சுமி

கத்திரிக்காய் பிரசாதம்: கேரளாவில் உள்ள கூடல் மாணிக்க சேத்திரம் என்ற ஊரில் இறைவனுக்கு நைவேத்தியமாகவும், பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் அளிக்கப்படுவது கத்திரிக்காய்தான்.

Brinjal Prasadham

தேங்காய் துருவல் நைவேத்தியம்: ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளுக்கு தேங்காயை உடைத்து நைவேத்தியம் செய்வதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் படைக்கிறார்கள். தேங்காயை உடைத்தால் அந்தச் சத்தம் பள்ளிகொண்ட பெருமாளை எழுப்பி விடுமாம்!

Coconut thuruval Prasadham

சர்க்கரைப் பொங்கல்: திருக்கண்ணபுரம் என்னும் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் பெருமாள் பெயர் சௌரிராஜ பெருமாள். இந்தக் கோயிலில் தினமும் நள்ளிரவில்தான் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்படுகின்றது.

Sakkarai pongal prasadham

கஷாயத் தீர்த்தம்: கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்தில் இரவு பூஜையின்போது தினமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது கஷாயத் தீர்த்தப் பிரசாதம். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருத்துவக் குணங்கள் கொண்டது இந்தப் பிரசாதம்.

Kashaya theertham

சுருட்டு நிவேதனம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் விராலிமலை. இங்கு கோயில்கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமிக்கு அந்திக் கால பூஜையில் சுருட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

Suruttu Prasadham

சுக்கு காபி நிவேதனம்: குற்றாலத்தில் குற்றாலநாதருக்கும் அம்மனுக்கும் நாள்தோறும் சுக்கு காப்பியை நைவேத்தியம் செய்கிறார்கள்.

Sukku Coffee prasadham

கோரைக்கிழங்கு நைவேத்தியம்: கோரைக்கிழங்கைப் பக்குவமாகச் சமைத்து பகவானுக்குப் படைக்கும் ஒரே வைணவ தலம் ஸ்ரீமுஷ்ணம் ஆகும்.

Koraikizhangu for Sri Mushnam

குடலை இட்லி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வரதராஜ பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கருவேப்பிலை மணத்துடன் கூடிய குடலை இட்லி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Kudalai Idly

பானகம்: விஜயவாடாவிற்கு அருகில் உள்ளது பானக நரசிம்மர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு அடிக்கடி பானகம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

Paanagam

வெள்ளி நாணயம்: மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் சிறிய பாக்கெட்டில் சிறிய வெள்ளி நாணயம் இருக்கும். மேலும், புழுங்கல் அரிசி, உலர்ந்த ஆப்பிள், உலர்ந்தத் தேங்காய் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் கலவையும் பிரசாதமாக வழங்கப்படும்.

Silver Coin

ஃபிரைடு ரைஸ் நிவேதனம்: சீன காளி கோயில் கல்கத்தா காளி தேவிக்கு நூடுல்ஸ், சாப்சூயி மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகள் நைவேத்தியத்திற்கு வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Fried Rice

பாகற்காய் நிவேதனம்: திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சோறும் பாகற்காய் கறியுமே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

Bitter gaurd Parsadham

மூலிகைச் சாறு நிவேதனம்: கேரளாவில் உள்ள திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளை சாறு எடுத்து, அதை பாலுடன் கலந்து ஈசனுக்கு நைவேத்தியமாகப் படைக்கின்றனர். பின்னர் அது பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

Mooligai saaru

சாம்பார் சாதம் – கொத்சு: சிதம்பரம் நடராஜ பெருமாள் கோயிலில் சாயங்காலம் இரண்டாம் கால பூஜையில் இறைவனுக்கு சம்பார் சாதத்துடன் கத்தரிக்காய் கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள்.

Saambar Prasadham
Honey