பறவைகளைப் பற்றிய 10 ஆச்சரியமான உண்மைகள்!

கிரி கணபதி

நம்மில்ல நம்மள சுத்தி எத்தனையோ பறவைகள பாக்குறோம், இல்லையா? காக்கா, குருவி, புறானு நமக்கு தெரிஞ்ச பறவைகள் சில தான். ஆனா, இந்த பறவைகளைப் பத்தி நமக்கு தெரியாத எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் இருக்கு.

Bird

1. பறவைகளின் மூதாதையர்கள் டைனோசர்கள்!

ஆமாங்க, நீங்க படிக்கிறது சரிதான். பல மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசர்களோட ஒரு வகையிலிருந்து தான் பறவைகள் உருவாச்சுனு விஞ்ஞானிகள் சொல்றாங்க. முக்கியமா, 'தெரோபாட்' (Theropod) - ங்குற டைனோசர் இனத்தோட நேரடி வாரிசுகள் தான் இப்போ இருக்குற பறவைகள்.

Bird

2. உலகின் மிகச்சிறிய பறவை!

Hummingbird தான் உலகத்திலேயே மிகச்சிறிய பறவை. இதுல 'பீ Bee Hummingbird வெறும் 2.25 இன்ச் நீளம் தான் இருக்கும். இதோட எடை ஒரு சர்க்கரை மிட்டாய விட கம்மி. அதோட முட்டை ஒரு காபி கொட்டை அளவு தான் இருக்கும்.

Bird

3. பின்னோக்கி பறக்கும் ஒரே பறவை!

ஹம்மிங்பேர்டால மட்டும் தான் பின்னோக்கி பறக்க முடியும். அதோட இறக்கைகள் ஒரு வினாடிக்கு 80 தடவை வரைக்கும் அடிச்சுக்கும். இதனால தான் அதால ஒரே இடத்துல நிக்கவும், முன்னும் பின்னும் பறக்கவும் முடியுது.

Bird

4. கண்கள் தான் சூப்பர் பவர்!

ஆந்தைக்கு அதோட தலைய திருப்பாம அதோட கண்களை மட்டும் அசைக்க முடியாது. ஆனா, அதோட தலைய கிட்டத்தட்ட 270 டிகிரி வரைக்கும் திருப்ப முடியும். இதனால, அதுக்கு பின்னாடி என்ன நடக்குதுனு கூட ஈசியா பாக்க முடியும்.

Bird

5. நிறங்களைப் பார்க்கும் காக்கா!

நம்ம காக்காவால மனுஷங்கள மாதிரி நிறங்கள பாக்க முடியும். அதோட மட்டும் இல்லாம, அதால புற ஊதா கதிர்களையும் பாக்க முடியும்னு சொல்றாங்க. இதனால தான் அதால உணவ ஈசியா கண்டுபிடிக்க முடியுது.

Bird

6. புத்திசாலித்தனமான பறவைகள்!

பறவைகளிலேயே காக்காவும், கிளியும் ரொம்ப புத்திசாலி. ஒரு சில வகை காக்காக்களால கருவிகள உருவாக்கவும், பயன்படுத்தவும் முடியும். கிளிகளால மனுஷங்கள மாதிரி பேச கத்துக்க முடியும்.

Bird

7. எலும்புகள் ரொம்ப லேசானவை!

பறவைகளோட எலும்புகள் உள்ளீடற்று இருக்கும். இதனால தான் அதோட உடம்பு ரொம்ப லேசா இருக்கு, பறக்குறதுக்கும் சுலபமா இருக்கு.

Bird

8. இதயத் துடிப்பு ரொம்ப அதிகம்!

பறக்கும்போது ஒரு பறவையோட இதயத் துடிப்பு ஒரு நிமிஷத்துக்கு 1000 தடவைக்கு மேல கூட துடிக்குமாம். ஓய்வு எடுக்கும்போது இது கம்மியாகிடும்.

Bird

9. உலகின் வேகமான பறவை!

பெரேகிரின் ஃபால்கன் (Peregrine Falcon) தான் உலகத்திலேயே வேகமான பறவை. இது இரைய தேடி மேல இருந்து கீழ வரும்போது மணிக்கு 386 கிலோமீட்டர் வேகத்துல பறக்கும். இது ஒரு ஃபார்முலா 1 கார் வேகத்த விட அதிகம்!

Bird

10. பாடும் திறமை!

ஆண் பறவைகள் தான் பொதுவா நல்லா பாடும். தன்னோட இணைய கவரவும், மத்த பறவைகளுக்கு தன்னோட எல்லைய அறிவிக்கவும் தான் இந்த மாதிரி பாடுது. ஒவ்வொரு பறவைக்கும் தனித்துவமான பாட்டு இருக்கும்.

Bird
Cooking-tips
அசத்தல் சமையலுக்கு அசத்தல் டிப்ஸ்!