தேவாங்கு (Tarsier) பற்றிய 10 ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

கிரி கணபதி

இன்னைக்கு நாம ஒரு குட்டி, ஆனா ரொம்பவே விசித்திரமான ஒரு ஜீவனைப் பத்தி பார்க்கப் போறோம். அது பேரு தான் தேவாங்கு (Tarsier).

Tarsier

1 - ராட்சச கண்கள்!

முதல்ல கண்ணுல ஆரம்பிப்போம். ஒரு தேவாங்கின் ஒரு கண்ணு, அதோட மூளையை விட பெருசா இருக்குமாம். அதோட உடம்புலேயே பெரிய உறுப்பு இதுதான். ஆனா ஒரு சிக்கல், இந்தக் கண்களை அதால நம்மள மாதிரி சுழற்ற முடியாது.

Tarsier

2 - 360° ஹெட் ஸ்பின்!

கண்ணை சுழற்ற முடியாட்டி என்ன? இது ஆந்தைக்கே டஃப் கொடுக்கும். தன்னோட தலையை கிட்டத்தட்ட 360 டிகிரி வரைக்கும் சுற்ற முடியுமாம். உடம்பை திருப்பாமலேயே பின்னாடி யார் வராங்கன்னு ஈஸியா பார்த்துடும்.

Tarsier

3 - 100% அசைவம்!

பார்க்க சாது மாதிரி இருந்தாலும், இது பக்கா நான்-வெஜ். இது பழம், காய் எல்லாம் சாப்பிடாது. பூச்சிகள், சிலந்திகள், பல்லிகள், ஏன் குட்டிப் பறவைகள், வௌவால்களைக் கூட வேட்டையாடி சாப்பிடும்.

Tarsier

4 - 'நைட் பார்ட்டி' ஜீவன்!

இது ஒரு சரியான 'நைட் அவுல்' (Nocturnal). பகல் முழுக்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, ராத்திரி ஆனா போதும், வேட்டைக்குக் கிளம்பிடும். அந்த பெரிய கண்கள் ராத்திரியில பார்க்குறதுக்கு தான்!

Tarsier

5 - தாவுறதுல கிங்!

இதோட உடம்பு ரொம்ப குட்டி. ஆனா இதோட பின்னங்கால்கள் ரொம்ப நீளமா இருக்கும். இந்த காலை வச்சு, தன்னோட உடம்பு நீளத்தை விட 40 மடங்கு தூரம் வரைக்கும்கூட தாவுமாம். அதாவது சுமார் 5 மீட்டர் வரைக்கும் தாவி மரத்துக்கு மரம் போகும்.

Tarsier

6 - பேருலேயே ஒரு மேட்டர்!

இதோட பேரு 'டார்சியர்' (Tarsier) னு வரக் காரணமே அதோட கணுக்கால் எலும்புகள் (Tarsal bones) தான். அந்த எலும்புகள் ரொம்ப நீளமா இருக்கறதால தான், இதால இவ்வளவு தூரம் தாவ முடியுது.

Tarsier

7 - சீக்ரெட் பாஷை!

இதுங்க ஒன்னோட ஒன்னு பேசிக்கிறது நம்ம காதுக்கே கேட்காதாம்! ஆமா, மனுஷங்க காதுக்கு கேட்காத 'அல்ட்ராசவுண்ட்' சத்தத்துல தான் இதுங்க கத்திப் பேசிக்குமாம்.

Tarsier

8 - ஒல்லிக்குச்சி விரல்கள்!

இதோட விரல்கள் ரொம்ப நீளமா, ஒல்லியா இருக்கும். மரக்கிளைகளை இறுக்கமா பிடிக்கவும், பூச்சிகளை டக்குனு பிடிச்சு எடுக்கவும் இந்த நீளமான விரல்கள் தான் உதவுது.

Tarsier

9 - சோகமான உண்மை!

இது கொஞ்சம் சோகமான விஷயம். தேவாங்குகளை கூண்டுல அடைச்சு வச்சா அதுகளுக்கு சுத்தமா பிடிக்காதாம். ரொம்ப மன அழுத்தமாகி, கூண்டுல தலையை இடிச்சுக்கிட்டு தற்கொலையே செஞ்சுக்க முயற்சி பண்ணுமாம். அதனால இதுங்க காட்டுல சுதந்திரமா இருக்குறது தான் நல்லது.

Tarsier

10 - குறிப்பிட்ட இடம்!

இந்த விசித்திரமான பிராணிகளை நம்ம ஊர்ல பார்க்க முடியாது. இதுங்க தென்கிழக்கு ஆசியாவுல இருக்குற தீவுகள்ல (பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா) மட்டும்தான் வாழுது.

Tarsier
தேவாங்கு
வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால்...