மணிமேகலை பெரியசாமி
தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற பகுதிகளில், கடலைகளை வேகவைத்துச் சாப்பிடும் பழக்கம் பல தலைமுறைகளாக உள்ளது.
வறுத்த கடலையை விட வேக வைத்த கடலைதான் அதிக ஆரோக்கியம் என அவர்கள் நம்புகிறார்கள். இது உண்மையா? ஆம்! ஆரோக்கிய வல்லுநர்களின் கருத்தாகவும் இது உள்ளது.
வேக வைத்த வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட், பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க உதவுகின்றன.
வேகவைப்பதால், அதில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து, அதன் சத்துக்கள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. இதனால், இதய நோய் அபாயம் குறைவதுடன், இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்க உதவுகிறது.
வெறும் 100 கிராம் கடலையில் கிட்டத்தட்ட 25 கிராம் புரதம் கிடைக்கிறது. இட்லி, உப்புமா, அவல் போன்ற காலை உணவுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடுவது கூடுதல் சக்தியை அளிக்கும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் எடை கூடும் என்பது ஒரு தவறான நம்பிக்கை. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது. இதனால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது.
இதில் உள்ள நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள்போன்றவை மூளை செல்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. சோர்வு மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
வேகவைத்த கடலையில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற சக்தி வாய்ந்த சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
வேகவைத்த கடலையில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற சக்தி வாய்ந்த சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
வேகவைத்த கடலை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாவதைத் தடுத்து, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
வேகவைத்த வேர்க்கடலை உண்மையிலேயே ஒரு ஸ்மார்ட் ஸ்நாக் ஆகும். இது உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதுடன், நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.