எறும்புகளின் 10 வியக்க வைக்கும் ரகசியங்கள்!

கிரி கணபதி

எறும்புகள் நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி தென்படும் சிறிய உயிரினங்கள். அவை பார்ப்பதற்குச் சிறியதாக இருந்தாலும், அவற்றின் உலகம் வியக்கத்தக்க ரகசியங்களைக் கொண்டுள்ளது.

Ant

1. அசாத்திய வலிமை:

எறும்புகளால் தங்கள் உடல் எடையை விட 10 முதல் 50 மடங்கு அதிகமான எடையைத் தூக்க முடியும். இது ஒரு மனிதன் ஒரு பெரிய லாரியைத் தனியாகத் தூக்குவதற்குச் சமமானது. அவற்றின் சிறிய தசைகள் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகின்றன.

Ant

2. காதுகள் இல்லை:

எறும்புகளுக்கு மனிதர்களைப் போல காதுகள் கிடையாது. அப்படியென்றால் அவை எப்படி சத்தத்தைக் கேட்கின்றன? அவை தங்கள் கால்கள் மூலமாகத் தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து சுற்றுப்புறத்தை அறிகின்றன.

Ant

3. இரண்டு வயிறுகள்:

இது மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல். எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒரு வயிறு தனக்கான உணவைச் செரிக்கப் பயன்படுகிறது. மற்றொன்று, தான் சேகரித்த உணவைப் பிற எறும்புகளுடன் பகிர்ந்துகொள்வதற்காகச் சேமித்து வைக்கப் பயன்படுகிறது.

Ant

4. விவசாயம் செய்யும்:

மனிதர்கள் விவசாயம் செய்யத் தொடங்குவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே எறும்புகள் விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டன. சில வகை எறும்புகள், இலைகளை வெட்டி, அதில் பூஞ்சைகளை வளர்த்து உணவாக உட்கொள்கின்றன.

Ant

5. அடிமைப்படுத்தும் வழக்கம்:

சில எறும்பு இனங்கள் பிற எறும்புக் கூட்டத்தைத் தாக்கி, அங்குள்ள முட்டைகளைத் திருடி வந்துவிடும். அந்த முட்டையிலிருந்து வெளிவரும் எறும்புகளைத் தங்கள் வேலைக்காரர்களாக மாற்றி வேலை வாங்குகின்றன.

Ant

6. நுரையீரல் இல்லை:

எறும்புகளுக்கு நுரையீரல் கிடையாது. அவற்றின் உடலில் உள்ள சிறிய துளைகள் வழியாகவே சுவாசிக்கின்றன. ஆக்சிஜன் இந்தத் துளைகள் வழியாக உள்ளே சென்று, கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.

Ant

7. டைனோசர் காலத்து உயிரினம்:

எறும்புகள் நேற்றோ இன்றோ தோன்றியவை அல்ல. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே இவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. ஒரு மாபெரும் பேரழிவையே தாங்கி நின்ற இனம் இது.

Ant

8. நீச்சல் திறன்:

எல்லா எறும்புகளுக்கும் நீச்சல் தெரியாது என்றாலும், சில வகை எறும்புகள் தண்ணீரில் விழுந்தாலும் மூழ்காமல், நீந்திக் கரையேறும் திறன் பெற்றவை. வெள்ளப்பெருக்கு போன்ற காலங்களில் இவை ஒன்றோடு ஒன்று இணைந்து மிதவைகளை உருவாக்கித் தப்பிக்கும்.

Ant

9. மனிதர்களை விட எண்ணிக்கை அதிகம்:

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக 10 லட்சம் எறும்புகள் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலகின் மொத்த எறும்புகளின் எடையைக் கணக்கிட்டால், அது பூமியில் உள்ள அனைத்து மனிதர்களின் எடைக்குச் சமமாக இருக்கும்.

Ant

10. ராணி எறும்பின் நீண்ட ஆயுள்:

வேலைக்கார எறும்புகள் சில மாதங்களில் இறந்துவிடக்கூடும். ஆனால், ராணி எறும்பு அப்படியல்ல. அது பல ஆண்டுகள் உயிர்வாழும். சில ராணி எறும்புகள் 30 ஆண்டுகள் வரை வாழ்ந்ததற்கான பதிவுகள் உள்ளன.

Ant

எறும்புகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அவை இயற்கையின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.

Ant
Puttaparthi-Sri-Sathya-Sai-Baba
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் பொன்மொழிகள்!