நான்சி மலர்
மான்டரின் மீன் (Mandarin fish) பசிபிக் பெருங்கடலில் காணப்படும் மீனாகும். இது பளிச்சிடும் நீலம், பச்சை, ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
மயில் (Peacock) தென் ஆசியாவில் அதிகம் காணப்படும். மயில் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அதன் தோகையின் பச்சை மற்றும் நீல நிறம் பார்ப்பவர்களை பரவசமாக்கும் வகையில் அமைந்திருக்கும்.
Scarlet macaw தென் அமேரிக்க நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், நீல நிறம் கொண்ட சிறகுகள் பார்ப்பவர்களை அதன் அழகில் மயக்கும் வண்ணம் இருக்கும். இது மிகவும் புத்திசாலியான பறவையாகும்.
Poison dart frog தென் அமேரிக்காவில் காணப்படும் விஷம் உள்ள தவளையாகும். இது நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் இருக்கும். யாரேனும் இதை தொட்டால், அதன் விஷத்தால் இறக்க வேண்டி வரும் என்பதற்கு Poison dart frogன் நிறம் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.
Rainbow lorikeet ஆஸ்திரேலியாவில் உள்ள அழகிய கிளி வகைகளில் ஒன்றாகும். இது நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற சிறகுகளை கொண்டது. இது பூவில் இருக்கும் தேன் மற்றும் பழங்களை உண்டு வாழக்கூடியது.
Panther chameleon மடகாஸ்கரில் வாழக்கூடிய பச்சோந்தி வகையை சார்ந்தது. இது அதனுடைய Mood, environment, temperature ஆகியவற்றை பொருத்து அழகிய நிறங்கள் மாறக்கூடியது.
கிழக்கு ஆசியாவில் இருக்கும் Mandarin duck வாத்து வகையில் மிகவும் அழகியதாக கருதப்படுகிறது. இதன் ஆரஞ்ச், பச்சை, வெள்ளை, நீல சிறகுகள் இதன் அழகை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
Nudibranch கடலில் வாழக்கூடிய நத்தை வகையை சார்ந்தது. இதன் பளிச்சிடும் நிறத்திற்கு பெயர் போனது. நியான் நீலம், ஆரஞ்ச் நிறங்கள் கண்ணை பறிப்பதாக இருக்கும், அதை வைத்து எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும்.
Resplendent quetzal அமேரிக்காவில் காணப்படும் பறவையாகும். இதன் பச்சை, சிவப்பு நிறங்கள் காண்போரைக் கவரக்கூடியதாக இருக்கும். ஆண் பறவையின் நீளமான வால் அதன் அழகை மேலும் கூட்டும்.
Peacock spider மற்ற சிலந்திகளைப் போல வலை பிண்ணுவதில்லை. இது ஆஸ்திரேலியாவில் பெரிதும் காணப்படுகிறது. Peacock spider ல் 100 வெவ்வேறு இனங்கள் இருக்கின்றது. இது தன் இணையை மயக்க நடனம் ஆடும் என்பது குறிப்பிடத்தக்கது.