பலருக்கும் தெரியாத குரங்குகளின் சுவாரஸ்யமான 10 ரகசியங்கள்!

கிரி கணபதி

குரங்குகள் என்றாலே மரத்துக்கு மரம் தாவுவதும், நம்மிடம் இருந்து தின்பண்டங்களைப் பறித்துச் சாப்பிடுவதும் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், மனிதர்களுக்கு மரபணு ரீதியாக மிக நெருக்கமான இந்த உயிரினங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளாத பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் உள்ளன.

Monkey

1. காடுகளில் வாழும் குரங்குகள் நாம் நினைப்பது போல் வாழைப்பழங்களை விரும்பிச் சாப்பிடுவதில்லை. சொல்லப்போனால், பல காட்டுப் பகுதி குரங்குகளுக்கு வாழைப்பழம் என்றால் என்னவென்றே தெரியாது. அவை பூச்சிகள், இலைகள், பூக்கள் மற்றும் காட்டுப் பழங்களையே உண்கின்றன.

Monkey

2. அமெரிக்கப் பகுதியில் உள்ள குரங்குகள் தங்களது வாலை 5-வது கை போலப் பயன்படுத்தி மரக்கிளைகளைப் பிடித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்காவில் வாழும் குரங்குகளால் வாலை அப்படிப் பயன்படுத்த முடியாது.

Monkey

3. மனிதர்களைப் போலவே குரங்குகளின் கை விரல்களிலும் தனித்துவமான கைரேகைகள் உள்ளன. அதே போல, அவற்றுக்கும் நகங்கள் உண்டு.

Monkey

4. Capuchin வகை குரங்குகள் மிகவும் புத்திசாலிகள். கடினமான கொட்டைகளை உடைக்க, பெரிய கற்களை சுத்தியல் போலப் பயன்படுத்தும் அளவுக்கு அறிவாற்றல் கொண்டவை.

Capuchin

5. உலகின் மிகச்சிறிய குரங்கு Pygmy Marmoset. இது வெறும் ஒரு ஆப்பிள் பழத்தின் எடை தான் இருக்கும். உங்கள் உள்ளங்கையிலேயே இதைச் செல்லமாக உட்கார வைத்துவிடலாம்.

Pygmy Marmoset

6. நாம் பலரும் சிம்பன்சி, கொரில்லா மற்றும் ஒராங்குட்டான் போன்றவற்றை குரங்கு வகை என நினைக்கிறோம். ஆனால், அவை 'Apes' எனப்படும் வாலில்லா மனிதக்குரங்கு வகையைச் சேர்ந்தவை. உண்மையான குரங்குகளுக்கு வால் இருக்கும்.

Apes

7. ஜப்பானிய Macaque குரங்குகள் கொஞ்சம் ஹைஜீனிக். இவை, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் சுத்தமாகக் கழுவி விட்டுத்தான் சாப்பிடும்.

Macaque

8. Howler குரங்குகள் கத்தும் சத்தம் அடர்ந்த காடுகளில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருப்பவர்களால் கூட கேட்க முடியும்.

Howler

9. குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக உட்கார்ந்து பேன் பார்ப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது வெறும் முடிகளைச் சுத்தம் செய்வதற்காக மட்டும் அல்ல, தங்களுக்குள் உள்ள அன்பையும் சமூகப் பிணைப்பையும் பலப்படுத்திக்கொள்ளவே அப்படிச் செய்கின்றன.

Monkey

10. Bald Uakari என்ற குரங்கின் முகம் ரத்தச் சிவப்பில் தக்காளிப் பழம் போல் இருக்கும். முகம் எந்த அளவுக்குச் சிவப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

Bald Uakari

குரங்குகள் வெறும் குறும்புக்கார விலங்குகள் மட்டுமல்ல; அவை மனிதர்களைப் போலவே அதீத புத்திசாலித்தனமும், சிக்கலான சமூக அமைப்பும் கொண்ட அற்புதமான உயிரினங்கள்.

Bald Uakari
murukku
இத்தனை நாளா சமையல் அறையில் இது தெரியாம தான் கஷ்டப்பட்டீங்களா?