இத்தனை நாளா சமையல் அறையில் இது தெரியாம தான் கஷ்டப்பட்டீங்களா?

சி.ஆர்.ஹரிஹரன்

 1/12. பனீர் செய்யும்போது எலுமிச்சைச் சாற்றை சூடான பாலில் கலப்பதைவிட, வெது வெதுப்பான பாலில் தயிரைக் கலந்தால் நிறைய பனீர் கிடைக்கும்.

paneer

2/12. பூரி ஹோட்டல் பூரி போல் உப்பலாக வர வேண்டுமென்றால், பூரிக்கு மாவு பிசையும் போதே, கொஞ்சம் சோயாமாவும், சர்க்கரையும் சேர்த்து பிசைய வேண்டும்.

poori

3/12. உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத தயிர் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.

potato

4/12. ரொட்டி காய்ந்து விட்டால், நீராவியில் வேகவைத்து பயன்படுத்தினால் புதியது போல இருக்கும்.

roti

5/12. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து அல்வா செய்து, சிறிது பாதாம் எஸ்ஸன்ஸ் விட்டால், அசல் பாதாம் அல்வா போலவே இருக்கும்.

boiled potato

6/12. வாழைப்பூவை குக்கரில் வேக வைத்தால் கறுத்து விடும். வாழைப்பூவை சிறிது தயிர் விட்டுப் பிசிறி இட்லித்தட்டில் வேக வைத்தால் நிறம் மாறாமலிருக்கும்.

banana flower

7/12. காய்ச்சிய எண்ணையை ஆறவிட்டு, ஊறுகாய் ஜாடியில் ஊற்றினால் ஊறுகாய் பூசணம் பிடிக்காது.

pickles

8/12. எந்த வித ரசத்திற்கும் இறக்கும் முன், ஒரு கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்து, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் ரசம் மணமாக இருக்கும்.

rasam

9/12. காலையில் செய்த கீரை மசியல் மீந்து விட்டால் அதைக் கோதுமை மாவில் கலந்து சுவையும், சத்தும் நிறைந்த சப்பாத்தி செய்யலாம்.

keerai

10/12. கத்திரிக்காய் சமைக்கும்போது அதனுடன் சிறிது தயிரைச் சேர்த்துக் கொண்டால் காயின் நிறம் மாறாமலிருக்கும்.

brinjal

11/12. ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து, ஆறியதும் தயிரில் ஊறப் போட்டு, அதில் உப்பு, சிறிய பச்சை மிளகாய், கடுகு தாளித்து, கொத்தமல்லி இலை சேர்த்து சுவையான தயிர் பச்சடி செய்யலாம்.

sago

12/12. முறுக்கு மாவுடன் ஒரு பிடி வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்துக்கொண்டால் முறுக்கு கரகரப்பாக மேலும் சுவையுடன் இருக்கும்.

muruku
summer disease
வெயிலில் வெளியே போகிறீர்களா? இந்த 10 நோய்கள் உங்களைத் தாக்கும்... எச்சரிக்கை!