பச்சோந்தி பற்றிய யாரும் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள்!

கிரி கணபதி

பச்சோந்தி என்றாலே முதல்ல நம்ம நினைவுக்கு வர்றது என்ன? டக்குனு கலர் மாறும் வித்தைதான், இல்லையா? ஊர்வன வகையில ஒரு மாஸ்டர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்குற இந்த பல்லி இனத்தைப் பத்தி, நமக்குத் தெரிஞ்சத விட தெரியாத விஷயங்கள் தான் அதிகம்.

Chameleon

1. கலர் மாற்றுறதுக்கு காரணம் பயம்:

பொதுவா, பச்சோந்தி தன்னோட பின்னணியைப் பார்த்து கலர் மாத்துதுனு நாம நினைக்குறோம். ஆனா, அது முழு உண்மை இல்லை. தன்னோட உடல் வெப்பநிலை, பயம், கோபம், இனப்பெருக்க ஆசை மற்றும் வெளிச்சத்துக்கு ஏத்த மாதிரிதான் கலர் மாத்தும்.

Chameleon

2. கண்களை தனித்தனியா சுழற்றும்:

பச்சோந்தியோட கண்கள் ரொம்பவே ஸ்பெஷலானது. ஒரு கண்ணை ஒரு திசையிலயும், இன்னொரு கண்ணை வேற ஒரு திசையிலயும் (360 டிகிரி) சுழற்ற முடியும். இதனால, அது சுத்தி என்ன நடக்குதுனு ஒரே நேரத்துல பார்க்க முடியும்.

Chameleon

3. நாக்கு தான் அதோட சூப்பர் பவர்:

பச்சோந்தியோட நாக்கு அதோட உடலை விட இரண்டு மடங்கு நீளமா இருக்கும். அதுமட்டுமில்லாம, வேட்டையாடும்போது, தன்னோட இரையை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்துல தாக்கி பிடிக்கும் சக்தி அந்த நாக்குக்கு இருக்கு.

Chameleon

4. வேகமான இரை பிடிப்பு:

இந்த நாக்கின் தாக்குதல் வேகம் பத்தி சொன்னா ஆச்சரியப்படுவீங்க. அது ஒரு வினாடிக்குள்ள '0'ல இருந்து மணிக்கு 60 மைல் வேகத்தை அடையுமாம். இது ஒரு சூப்பர் கார் வேகத்த விட அதிகமானது.

Chameleon

5. சுருண்ட வால்:

பச்சோந்தியோட வால் எப்பவுமே சுருண்டு, கம்பி மாதிரி இருக்கும். மரக்கிளைகளை உறுதியா பிடிச்சுக்க இந்த வால் ரொம்பவே உதவும். மரங்கள்ல இருந்து கீழே விழாம இருக்க இது ஒரு அத்தியாவசிய கருவி.

Chameleon

6. காதுகள் கிடையாது:

பச்சோந்திகளுக்கு வெளிப்புற காதுகள் கிடையாது. அதனால, மனுஷங்க கேக்குற மாதிரி சத்தங்களால அது கேட்க முடியாது. ஆனா, ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட சத்தங்களை அது உணர முடியும்.

Chameleon

7. கால்களில் தனிச்சிறப்பு:

அதனுடைய பாதங்கள் Zygodactylous Feet-னு சொல்லுவாங்க. அதாவது, ஒரு பாதத்துல ரெண்டு விரல் ஒரு பக்கமும், மூணு விரல் இன்னொரு பக்கமும் பிரிஞ்சிருக்கும். இது மரக்கிளைகளை ரொம்ப ஸ்ட்ராங்கா பிடிச்சுக்க உதவும்.

Chameleon

8. முக்கியமா பூச்சிகளை சாப்பிடும்:

பச்சோந்திகள் பெரும்பாலும் பூச்சிகள், சிலந்திகள், வெட்டுக்கிளிகள் போன்றவற்றைத்தான் சாப்பிடும். ஆனா, பெரிய வகை பச்சோந்திகள் சின்ன பல்லிகள், பறவைகள் மற்றும் எலிகள் போன்றவற்றை கூட வேட்டையாடும்.

Chameleon

9. இனப்பெருக்க கலர் மாற்றம்:

ஆண் பச்சோந்திங்க பெண் பச்சோந்திகளை கவரவும், இல்லன்னா மத்த ஆண் பச்சோந்திகள விரட்டவும், அதோட தோலின் நிறத்தை ரொம்ப பிரைட்டா மாத்தும்.

Chameleon

10. ஒரே நேரத்துல நிறைய முட்டைகள்:

ஒரு பெண் பச்சோந்தி இனத்தைப் பொறுத்து, ஒரு தடவைக்கு 5ல இருந்து 80 முட்டைகள் வரைக்கும் இடும். ஆனா, முட்டையிட்ட பிறகு அதை அது பாதுகாக்குறது இல்ல. முட்டைகள் மணல்ல புதைக்கப்பட்டு, அதுவே பொரிஞ்சு குட்டி வெளிய வரும்.

Chameleon
motivation
உங்கள் வாழ்க்கையை மாற்றும் 14 தந்திரங்கள்!