அகிலா சிவராமன்
வாழ்க்கை Tough ஆக இருக்க வேண்டாம் என்று நினைக்கிறீங்களா... அப்ப இந்த 14 சுய குறிப்புகளை நினைவில் வச்சிங்கோங்க!
என் அகத்திலிருந்து அமைதி வந்தால் தான், அந்த அமைதி எனக்கு கிட்டும்.
நடக்கும் அனைத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், என்ன நடக்கிறது என்பதை அறிந்து, மேற் கொண்டு செயல்படுவதை என்னால் கட்டுப்படுத்த முடியும்.
என்ன இருந்திருக்கும் அல்லது என்ன இருந்திருக்க வேண்டும் என்பதில் நான் சிக்கிக் கொள்ள மாட்டேன். இப்போது என்ன இருக்கிறதோ அதன் சாத்தியக்கூற்றைப் பார்ப்பேன்.
நான் எவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்பதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை நினைவில் வைத்து கொள்வேன்.
நேர்மறையாக இருப்பது என்பது எதிர்மறையை ஏற்றுக்கொண்டு வெல்வதாகும்.
என் வழியில் வரும் எதையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும், முடிந்த அளவிற்கு சிறப்பாக செயலாற்றி அதற்கான விளைவை சந்திப்பேன்.
தவறுகளைச் செய்வது எப்போதும் போலியான பரிபூரணங்களை விட சிறந்தது.
நான் வெற்றி பெறும்போது ஒருபோதும் கர்வமாக இருக்க மாட்டேன். அதே சமயம் தோல்வியடையும்போது விரக்தியோடு இருக்க மாட்டேன்.
எனது பிரச்னைகளை நிர்வகிப்பது பற்றி குறைவாகவும், என் மனநிலையை நிர்வகிப்பது பற்றி அதிகமாகவும் யோசிப்பேன்.
ஒரு சவாலுக்கு நான் தலைவணங்கினால் மட்டுமே அது ஒரு தடையாக மாறும்.
வாழ்க்கை மிகவும் குறுகியது. என்னை நகர்த்தும் செயல்களில் நான் முதலீடு செய்வேன்.
முக்கியமானவற்றுக்கு எனக்கு நேரம் இல்லையென்றால், முக்கியமில்லாத விஷயங்களைச் செய்வதை நான் நிறுத்திவிடுவேன்.
நான் சிறந்தவன் என்று நினைக்காமல் இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவேன்.
எனது சிறிய வெற்றிகள் அனைத்தும் கொண்டாடத் தகுந்தவை.
இந்த குறிப்புகளை முடிந்த வரை நினைவில் வைத்து கொண்டால் நிச்சயமாக எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றியையும் சந்தோஷத்தையும் அடையலாம்.