கடல் குதிரை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

கிரி கணபதி

மற்ற எல்லா உயிரினங்களிலும் பெண் தான் குட்டி போடும், ஆனா கடல் குதிரைல மட்டும் ஆண் குதிரை தான் குட்டி போடும்.

சில வகை கடல் குதிரைகள் தங்களோட துணையோட ரொம்ப காலம் வரைக்கும் சேர்ந்து வாழுமாம்.

கடல் குதிரைக்கு வால் ரொம்ப முக்கியம். அதோட வால மரக்கிளைகள் அல்லது பவளப்பாறைகள்ல உறுதியா பிடிச்சுக்க முடியும். இது தண்ணில அடிச்சு போகாம இருக்கவும், ஒரே இடத்துல இருக்கவும் உதவுது.

நம்ம கண்கள் ரெண்டும் ஒரே திசையில தான் பார்க்கும், ஆனா கடல் குதிரையோட கண்கள் வேற மாதிரி. அதோட ஒவ்வொரு கண்ணையும் வேற வேற திசையில திருப்ப முடியும்.

கடல் குதிரைங்க பாக்குறதுக்கு அழகா இருந்தாலும், அதுங்க நீச்சல் அடிக்கிறதுல ரொம்ப மோசமானவை. முதுகு துடுப்பு ரொம்ப சின்னதா இருக்கும். அத வேகமா அசைச்சு தான் தண்ணில மெதுவா நகரும்.

கடல் குதிரைங்க சின்ன உயிரினங்கள தான் சாப்பிடும். முக்கியமா சின்ன ஓடுடைய கணுக்காலிகள் (crustaceans) மற்றும் பிளாங்க்டன் (plankton) போன்ற உணவுகள தான் விரும்பி சாப்பிடும்.

கடல் குதிரைங்க பெரும்பாலும் ஆழம் இல்லாத, வெப்பமான கடல் பகுதிகள்ல தான் வாழும். பவளப்பாறைகள் மற்றும் கடற்பாசி காடுகள் இருக்கிற இடங்கள்ல அதிகமா பார்க்கலாம்.

கடல் குதிரைக்கு உருமறைப்பு திறன் ரொம்ப அதிகம். அது தன்னோட உடம்போட நிறத்த தன்னோட சுற்றுப்புறத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கும். இது எதிரிகள்கிட்ட இருந்து தப்பிக்கவும், யாருக்கும் தெரியாம மறைஞ்சு இருக்கவும் ரொம்ப உதவியா இருக்கும்.

வாழ்விடங்கள் அழிஞ்சு போறதுனாலயும், அதிகமா மீன் பிடிக்கிறதுனாலயும் கடல் குதிரை இனங்கள் இப்ப அழிந்து வரும் நிலையில இருக்கு. கடல் குதிரைகளை பாதுகாக்கிறது ரொம்ப முக்கியம்.

கடல் குதிரைங்க தங்களோட உணர்ச்சிக்கும், சூழ்நிலைக்கும் ஏத்த மாதிரி நிறத்தை மாத்திக்கும். பயப்படும்போது இல்லன்னா சந்தோஷமா இருக்கும்போது நிறம் மாறும்.

கடல் குதிரை பார்க்குறதுக்கு சின்னதா இருந்தாலும், அதோட வாழ்க்கையும், பழக்க வழக்கங்களும் ரொம்பவே ஆச்சரியமானது. இந்த மாதிரி வினோதமான உயிரினங்கள நம்ம பாதுகாக்கணும்.

லியோ டால்ஸ்டாய் கூரிய 12 பொன்மொழிகள்!