எஸ்.மாரிமுத்து
ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் நாவலாசிரியருமான லியோ டால்ஸ்டாய் உலக அமைதிக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் அயராது பாடுபட்ட மாமனிதர். அவரது பொன் மொழிகள் சில...
சந்தோஷமான தருணங்களைப் பிடித்துக்கொள் காதலி, காதலிக்கப்படு! அது ஒன்றே உண்மை, மற்றவை எல்லாம் மாயை.
நேர்மையான வேலை மாளிகையை விட பெரியது.
எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அவரவர் வழியில் மகிழ்ச்சி அற்று இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் தொழில் மற்றவர்களுக்கு சேவை செய்வதே.
தூய்மையான முழுமையான சோகம் என்பது தூய்மையான முழுமையான சந்தோஷத்தை போலவே சாத்தியமற்றது.
நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்.
எளிமையே எல்லா நற்குணங்களுக்கும் அடிப்படை."
தொழில் எத்தனை கீழ்தரமானாலும் அதை செய்வதில் அவமானம் ஒன்றுமில்லை, சோம்பேறியாக தெரிவதுதான் அவமானம்.
ஒழுக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவன் எல்லா காரியங்களிலும் ஏமாற்றம் அடைவான். ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை.
ஒழுக்கத்தின் பெருமையே மரியாதை. ஒழுக்கம் பிச்சைக்கார வடிவத்தில் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதை அளிக்கப்படும்.
தன்னை உருக்கி பிறருக்கு வழி கொடுப்பது மெழுகு மட்டுமல்ல, சில இடங்களில் பெண்களும் தான். தனக்காக வாழ நினைப்பதை விட தன்னை நம்பி இருப்பவர்களுக்காக தன் வாழ்வையே சிலர் அர்ப்பணித்து விடுகிறார்கள்.
நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று உணர்ந்தால், நாம் எவ்வளவு பெரியவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்வோம்.