பனியில் வாழும் குட்டி தேவதை! நம் மனதைக் கொள்ளையடிக்க வரும் க்யூட் பறவை!

நான்சி மலர்

காண்பதற்கு மிகவும் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும் பனி தேவதை குருவி என்று அழைக்கப்படும் Snow Fairy Bird பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்..

snow fairy

1/10. இந்தப் பறவை ஒரு சிறிய வெண்ணிறப் பந்து போலவும், நீண்ட வால் கொண்டிருப்பதாலும் இதனை 'பனி தேவதை' அல்லது 'நீண்ட வால் பாடும் குருவி' என்று அழைக்கிறார்கள்.

snow fairy

2/10. பனி தேவதை குருவி உலகிலேயே மிகச்சிறிய பறவைகளில் ஒன்று. இதன் உடல் எடை வெறும் 7 முதல் 10 கிராம் மட்டுமே இருக்கும்.

snow fairy

3/10. இதன் மொத்த நீளத்தில் (13–15 செ.மீ), பாதிக்கும் மேலான நீளம் அதன் வாலிலேயே உள்ளது.

snow fairy

4/10. இவை சிலந்தி வலைகள், பாசிகள் மற்றும் இறகுகளைக் கொண்டு மிகவும் மென்மையான மற்றும் நீட்சி அடையக்கூடிய கூடுகளைக் கட்டுகின்றன.

snow fairy nest

5/10. பனி தேவதை குருவி எப்போதும் கூட்டமாக வாழ விரும்பும். குறிப்பாக குளிர்காலத்தில், உடல் வெப்பத்தைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமர்ந்து 'நெருப்புப் பந்து' போல காட்சியளிக்கும்.

snow fairy | credit youtube

6/10. ஒரு ஜோடி பறவையின் முட்டைகள் சேதமடைந்தால், அவை வருத்தப்படாமல் அருகில் இருக்கும் மற்ற பறவைகளின் குஞ்சுகளை வளர்க்க உதவும்.

snow fairy | credit groups.io

7/10. இவை பெரும்பாலும் சிறிய பூச்சிகள் மற்றும் சிலந்திகளை உணவாகக் கொள்கின்றன.

snow fairy | credit greater good

8/10. பனி தேவதை குருவி மிகவும் மெல்லிய ஒலியை எழுப்பும். அடர்ந்த காடுகளுக்குள் தன் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருக்க இந்த ஒலியைப் பயன்படுத்துகின்றன.

snow fairy | credit The Japan News

9/10. இவ்வளவு அழகான இந்தப் பறவைகளின் சராசரி ஆயுட்காலம் 2 முதல் 3 ஆண்டுகள் மட்டுமே.

snow fairy | credit JAPAN forward

10/10. பனி தேவதை குருவி ஜப்பான் போன்ற நாடுகளில் "மகிழ்ச்சியின் பறவை" (Bird of Happiness) என்று போற்றப்படுகிறது.

snow fairy | credit just meandering
Ten beautiful colours of sky
வேற்று கிரகம் போல மாறும் வானம்! சொர்க்கத்தை மிஞ்சும் 10 வண்ணக் காட்சிகள்!