வேற்று கிரகம் போல மாறும் வானம்! சொர்க்கத்தை மிஞ்சும் 10 வண்ணக் காட்சிகள்!

நான்சி மலர்

வானம் வெறும் நீல நிறம் மட்டுமல்ல; அது இயற்கையின் தூரிகையால் தீட்டப்படும் ஒரு விந்தைமிகு வண்ணக் கோலம். சூரிய ஒளி சிதறடிக்கப்படும் விதத்தைப் பொறுத்து, வானம் காட்டும் 10 அழகிய வண்ண மாற்றங்கள் இதோ...

blue sky

1/10. காலை வேளையில் சூரியன் உதித்த பிறகு, வானம் ஒரு பிரகாசமான வானத்து நீல (Sky Blue) நிறத்தைப் பெறுகிறது. இது புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வண்ணம்.

morning sky

2/10. சூரியன் உதயமாகும்போதும் மறையும்போதும், நீல நிறம் மறைந்து, வானம் முழுவதும் தங்க நிறம் மற்றும் மஞ்சள் ஒளியால் நிரம்புகிறது.

sunset

3/10. அந்தி சாயும் நேரத்தில், பூமியின் நிழலுக்குச் சற்று மேலே வானில் ஒரு மெல்லிய இளஞ்சிவப்பு அல்லது ரோஜா நிறப் பட்டை தோன்றும். இதை Belt of Venus என்று அழைப்பார்கள்.

Belt of Venus | credit devian art

4/10. வளிமண்டலத்தில் தூசு அல்லது ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, சூரிய மறைவு மிகத் தீவிரமான கருஞ்சிவப்பு அல்லது இரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

Crimson Sunset | credit bol

5/10. சூரியன் மறைந்த பிறகு, இருள் முழுமையாகச் சூழும் முன் வானம் ஒரு அடர்த்தியான கோபால்ட் நீலம் Indigo நிறத்திற்கு மாறும். இது ஒரு அமைதியான சூழலை உருவாக்குகிறது.

Indigo sky

6/10. சூரியன் மறையும் அந்த ஒரு நொடியில், சூரியனின் மேல் விளிம்பில் ஒரு சிறிய பச்சை நிற ஒளிக்கீற்று மின்னும். வளிமண்டல ஒளிவிலகலால் ஏற்படும் இந்த விந்தை கண்களுக்கு விருந்தாகும்.

The Green Flash | credit pinterest

7/10. இரவு நேர மேகங்கள் (Noctilucent clouds) சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்போது, மிக உயர்ந்த உயரத்தில் ஒரு வித மின்சார நீல நிறத்தில் வானம் ஜொலிக்கும். இது பனி படர்ந்த பகுதிகளில் அதிகம் தெரியும்.

Electric Blue | credit spaceRef

8/10. மழை மேகங்கள் சூழும்போது, வானம் ஒரு கனமான சாம்பல் அல்லது கரி நிறத்தை (Charcoal) அடையும். இது மழையின் வருகையை அறிவிக்கும் அழகிய நிறம்.

Charcoal sky

9/10. மலைப்பகுதிகளில் சூரிய மறைவிற்குப் பின் வானம் ஒரு வித ஊதா (Violet) அல்லது வயலட் நிறத்தில் ஜொலிப்பதைக் காணலாம்.

Violet Sky

10/10. இருள் சூழ்ந்த நள்ளிரவில், வானம் மை கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் பால்வெளி மண்டலத்தின் நட்சத்திரங்கள் சிதறிக் கிடப்பது வெள்ளி துகள்கள் போலக் காட்சியளிக்கும்.

night sky with stars
summer foods
டாக்டர்கள் பரிந்துரைக்கும் டாப் 10 கோடைக்கால உணவுகள் - இனி வெயிலை பார்த்து பயப்பட வேண்டாம்!