பிளமிங்கோ பறவைகள் பற்றி சில தகவல்கள்!

வாசுதேவன்

இவைகளை தமிழில் பூ நாரை அல்லது செங்கல் நாரை என்று அழைப்பார்கள். நாரை வகையை சார்ந்தவை.

Flamingo Bird | Imge Credit: pinterest

பல நூற்றுக் கணக்கான பிளமிங்கோ பறவைகள் ஒன்றாக கூடி நீர் நிலையில் ஆக்கிரமித்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி ஆகும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

இதன் ஆங்கிலப் பெயரான பிளமிங்கோ இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.

Flamingo Bird | Imge Credit: pinterest

இதன் அலகு மிகவும் நீண்டு இருக்கும். வளைந்தும் காணப்படும். அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

கடல் ஓரப் பகுதிகள், ஆழம் குறைந்த ஏரிகள், குளங்கள் இவற்றில் சிறிய அல்லது பெரிய குழுக்களாக இரை தேடும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

ஆழம் குறைந்த பகுதிகளில் கழுத்தைத் தாழ்த்தி தலையை முழுவதும் நீரில் செலுத்தி இரை தேடும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

மீன்கள், நண்டுகள், புழுக்கள், இறால்கள், பூச்சிகள், பாசிகள் ஆகியவற்றை உண்ணும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

பறக்கின்ற பொழுது இறக்கைகளில் இருக்கும் கரு நிறம் நன்றாக தெரியும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

பூ நாரைகள் நமது நாட்டின் கட்ச் பகுதியில் கூடுகள் அமைகின்றன. அங்கு இலட்சக் கணக்கான பறவைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

Flamingo Bird | Imge Credit: pinterest

தரையிலிருந்து 30 செமீ உயரத்துக்கு மண்ணைக் கொண்டு சிறிய மண் பானை வடிவில் கூடுகள் அமைக்கும் திறமை கொண்டவை இந்த வகை பறவைகள்.

Flamingo Bird | Imge Credit: pinterest

வருடத்துக்கு ஒரேயொரு முட்டைதான் இடும். பிளமிங்கோ குஞ்சு பருவத்தில் சாம்பல் நிறத்தில் இருக்கும். வளர்ந்ததும் இளஞ் சிவப்பு வண்ணத்தை பெறுகின்றன. இவை சராசரியாக 30 - 40 வயது வரை உயிர் வாழுகின்றன.

Flamingo Bird | Imge Credit: pinterest

வகைகளுக்கு ஏற்ப பிளமிங்கோ பறவைகளின் உயரம், எடை ஆகியவை வேறுபடும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

பொதுவாக பிளமிங்கோ பறவைகள் தங்கள் உணவுகளை அப்படியே உண்ணாது. வடி கட்டிய (filter) பிறகு விழுங்கி விடும்.

Flamingo Bird | Imge Credit: pinterest

இவை உணவுகளுக்காக இடம் பெயரும் தன்மை உடையவை.

Flamingo Bird | Imge Credit: pinterest

கூட்டமாக ஆகாயத்தில் பறக்கும் காட்சி தனி தன்மை பெற்றது. பார்ப்போரை பரவசம் அடைய வைக்கும்.

Flamingo Bird | Imge Credit: pinterest
Leo Tzu Quotes | Imge Credit: pinterest
Leo Tzu Quotes: சீன தத்துவஞானி லாவோட்ஸு பொன்மொழிகள்!