வாசுதேவன்
நறுமணத்திற்கு புகழ் பெற்ற மல்லிகை பூக்கள் குறித்து சில தகவல்கள்:
மல்லிகையில் கிட்டத்தட்ட 200 வகைகள் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இந்த வகை பூக்களுக்கு தனி இடம் உண்டு.
பெரும்பாலும் பெண்கள் விரும்பி சூடிக் கொள்ளும் பூக்களில் மல்லிகைக்கு தனி மதிப்பு உண்டு. வீடுகளில், பிரார்த்தனை செய்யும் இடங்களில், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றில் பெரும்பாலும் உபயோகிக்கப்படுவது மல்லிகை பூக்கள்.
ஆங்கிலத்தில் ஜாஸ்மின் (Jasmine) என்று அழைக்கப்படும் இந்த சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்ததாகும்.
முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில் ஒன்று. 1753ல் இந்த பேரினத்தை கண்டு பிடித்தவர் பெயர் கார்ல் லின்னேசு.
செடிகளாகவும், கொடிகளாகவும் படர்ந்து வளரும் இவை அளிக்கும் பூக்கள் கொத்து கொத்தாக பூத்து அசத்தும். இவை நிலங்களில், பண்ணைகள், தோட்டங்கள், வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.
இவை நமது நாட்டில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. மல்லி, மல்லே, மாலதி, மோத்தி, முக்தா, மல்லிகா, சமேலி, மொகாரா, ஜூயி, சாயாலீ.
மதுரை மல்லிக்கு என்றுமே ஸ்பெஷல் இடம் உண்டு. மதுரை மல்லி புவிசார் குறியீடு பெற்றுள்ளது. புகழ்பெற்ற மதுரை மல்லி இந்தியாவில் மட்டும் அல்லாமல் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யபபடுகின்றது.
பிலிப்பின்ஸ், தூனிசியா ஆகிய தேசியங்களில் தேசிய மலர் மல்லிகை.
மல்லிகை மருத்துவ குணம் கொண்டதாக கருத்தப்பட்டு உபயோகப்படுத்த படுகின்றன. மல்லிகையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு டிமான்ட் அதிகம். உடன் அதிக விலையும் ஆகும்.
சங்க இலக்கியத்தில் புகழ் பெற்ற அல்லி மலர்கள் பற்றி சில தகவல்கள்:
சங்க காலத்தில் ஆம்பல் என்ற பெயர் கொண்டு இருந்தவை அல்லி மலர்கள். நீரில் வளரும் ஒரு வகை கொடி மற்றும் மலரின் பெயர் அல்லி. இவற்றில் 50க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
இந்த அல்லி மலர்கள் இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை மலர்கள் காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
எகிப்தில் உள்ள புகழ் பெற்ற நைல் நதியில் பூக்கும் நீல நிற அல்லி பூக்கள் இரவில் மலர்ந்து காலையில் குவியும். அதே சமயம் அங்குள்ள வெள்ளை நிற அல்லி பூக்கள் காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
பூ, கொடி, இலை, காய் ஆகிய பகுதிகள் மருத்துவ குணங்கள் கொண்டவை.
அல்லிக்கு வேறு பெயர்கள் - ஆம்பல், குவளை, கருநெய்தல், நீலோற்பலம். சங்க கால இலக்கியங்களில் ஆம்பல் மலர்கள் (அல்லி மலர்கள்) உபயோகங்கள் குறித்து உயர்வாக குறிப்பிட பட்டுள்ளது.
விடுகளிலும் வளர்க்கலாம் அல்லி கொடிகளை பெரிய தொட்டிகளில். தாமரை இலையை விட மிகவும் லேசாக இருக்கும். தினமும் பூக்கள் பூக்கும் தன்மை கொண்டவை. அல்லி மலர்கள் குளிர், மழை காலங்களில் அதிகமாக பூக்கும்.