க்யூட்டான 'கோலா'க்கள் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 ரகசியங்கள்!

கிரி கணபதி

மென்மையான உருவம், எப்போதும் தூங்கும் முகம் - கோலா கரடிகள் என்றாலே நமக்கு இதுதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த 'டெடி பியர்' போன்ற விலங்குகள் உண்மையில் கரடிகளே அல்ல.

Koala Bear

1. கோலாக்கள் கரடி இனத்தைச் சேர்ந்தவை அல்ல. இவை கங்காருவைப் போலத் தன் வயிற்றில் குட்டியைச் சுமக்கும் 'பையுடைய விலங்குகள்' ஆகும்.

Koala Bear

2. இவை ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 22 மணிநேரம் வரை தூக்கத்திலேயே கழிக்கின்றன. அதன் உணவைச் செரிக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால் இந்த ஓய்வு.

Koala Bear

3. கோலாக்களின் கைரேகைகள் அச்சு அசலாக மனித கைரேகையைப் போலவே இருக்கும். குற்றப் புலனாய்வுத் துறையினரே சில சமயம் குழம்பிப் போகும் அளவுக்கு இது ஒத்துப்போகும்.

Koala Bear

4. மற்ற விலங்குகளுக்கு நஞ்சாகக் கருதப்படும் யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே இவை விரும்பி உண்ணும்.

Koala Bear

5. 'கோலா' என்ற சொல்லுக்கு ஆஸ்திரேலியப் பழங்குடி மொழியில் 'தண்ணீர் குடிக்காதது' என்று பொருள். இலைகளில் உள்ள ஈரப்பதமே இவற்றுக்குப் போதுமானது.

Koala Bear

6. பிறக்கும்போது ஒரு கோலா குட்டி ஒரு ஜெல்லி மிட்டாய் அளவில் தான் இருக்கும். கண்கள், காதுகள் கூட அப்போது அதற்குத் தெரியாது.

Koala Bear

7. மற்ற பையுடைய விலங்குகளைப் போலல்லாமல், கோலாக்களின் உடல் பை கீழ்நோக்கி திறக்கும் படி அமைந்திருக்கும்.

Koala Bear

8. எப்போதும் யூக்கலிப்டஸ் இலைகளைச் சாப்பிடுவதால், கோலாக்களின் உடலில் இருந்து எப்போதும் மூலிகை தைல வாசனை வீசிக்கொண்டே இருக்கும்.

Koala Bear

9.பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், இவை கோபப்படும்போது அல்லது துணையை அழைக்கும்போது எழுப்பும் சத்தம் மிகவும் பயங்கரமாக கரகரவென இருக்கும்.

Koala Bear

10. இவை உலகில் ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழ்கின்றன.

Koala Bear

பார்ப்பதற்குப் பொம்மை போல இருந்தாலும், கோலாக்கள் இயற்கையின் ஒரு மிகப்பெரிய அதிசயம். காலநிலை மாற்றத்தால் இன்று இந்த இனம் மெல்ல அழிந்து வருகிறது. இந்த அழகான உயிரினங்களைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Koala Bear
Pua
வாயில் கரையும் பீகாரி புவா ரகசியம்... 10 நிமிஷத்துல தயார்!