இரவில் ஒளிரும் மீன்கள் மற்றும் பூச்சிகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மின்மினி பூச்சி (Glow worms): Glow worms என்ற சில வகை வண்டுகளின் லார்வாக்கள் larvae இரையை ஏற்பதற்காகவோ அல்லது துணையை ஈர்ப்பதற்காகவோ பச்சை அல்லது நீல நிறத்தில் ஒளி விடுகின்றன.

Glowworms | Imeg Credit: The Guardian

லாந்தர் மீன் (Lantern Fish): இவை ஆழ்கடல் மீன்களாகும். இந்த விளக்கு மீன்கள் சிறிய அளவில் இருக்கும். உடலில் ஒளியை உருவாக்கும் உறுப்புகளை தங்கள் உடலில் கொண்டுள்ளன.

Lantern Fish | Imge credit: Getty Imgaes

ஆங்லர் ஃபிஷ் (Angular Fish): கடலின் ஆழத்தில் காணப்படும் ஆங்லர்ஃபிஷ் இருளில் இரையை ஈர்க்க அதன் நெற்றியில் ஒரு ஒளிரும் உறுப்பை கொண்டுள்ளது. ஆழ் கடலில் வேட்டையாடும் இந்த ஆங்லர்ஃபிஷ், இரையை ஈர்ப்பதற்காக எஸ்கா எனப்படும் பயோலுமினசென்ஸ் Bioluminescence பயன்படுத்துகிறது.

Angular Fish | Imge credit: ZBrushcentral

வாம்பயர் ஸ்க்விட் (Vampire Squid): இவை ஆழ்கடல் செபலோபாட் (Cephalopod) ஆகும். இவை ஒளியை உற்பத்தி செய்யும் செல்களைக் கொண்டுள்ளன. ஆழ்கடலில் தொடர்புக்காகவும் மற்றும் உருமறைப்புக்காகவும் ஒளியைப் பயன்படுத்துகின்றன.

Vampire Squid | Imge credit: National Geographic

மரைன் ஹாட்செட் ஃபிஷ் (Marine Hot set Fish): இது ஆழ் கடல் மீனாகும். இவை தன் உடலில் பிரதிபலிப்பு மேற்பரப்புகளை (Reflective surfaces) கொண்டுள்ளன.

Marine Hotset Fish | Imge Credit: Pod your Reef

ஒளிரும் கிளிக் வண்டுகள் (Click Beetle): கிளிக் வண்டுகள் தங்கள் உடலை ஸ்னாப்பிங் செய்வதன் மூலம் கிளிக் செய்யும் ஒலியை உருவாக்கும் திறனுக்காக அறியப்படுகின்றன. இவை பச்சை நிற பளபளப்பை வெளியிடுகின்றன.

Click Beetle | Imge credit: Warren photographic

கடல் மின்மினி பூச்சிகள் (Sea glittering Fish): மின்மினி பூச்சிகள் துணையை ஈர்ப்பதற்காக மெல்லிய ஒளியை வெளியிடுகின்றன.

Sea glittering Fish | Imge Credit: new scientist

பளபளப்பு புழுக்கள் (Glittering Worm): இவை மின்மினி பூச்சிகளைப் போலவே பயோலுமினசென்ட் (Bioluminescent) ஒளியை உருவாக்குகின்றன. இந்த லார்வாக்கள் இரையை ஈர்க்க மென்மையான ஒளியை வெளியிடுகின்றன. இவை பெரும்பாலும் இருண்ட குகைகள் அல்லது மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளில் காணப்படும்.

Glittering Worm | Imge credit: Getty Imaged

ஜெல்லி மீன் (Jelly Fish): பல்வேறு வகையான ஜெல்லி மீன்களின் பயோலுமினெசென்ஸ் (Bioluminescence) பெரும்பாலும் தற்காப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. வேட்டையாடுபவர்களை திகைக்க வைக்க அல்லது கடல் ஆழத்தில் துணையை ஈர்க்க அழகான ஒரு அதிர்ச்சியூட்டும் ஒளிக் காட்சியை உருவாக்குகின்றன.

Jelly Fish | Imge Credit: One tune

பூஞ்சை (Fungus): சில வகையான பூஞ்சைகள் (ஃபாக்ஸ்ஃபயர் பூஞ்சை போன்றவை), இருட்டில் மென்மையான ஒளியை வெளியிடும். இவை பெரும்பாலும் அழுகும் மரத்தில் காணப்படுகின்றன.

Fungus | Imge credit: Your mom

ஃபயர்ஃபிளை ஸ்க்விட் (Firefly Squid): பசிபிக் பெருங்கடலில் காணப்படும் இந்த சிறிய ஸ்க்விட், வேட்டையாடுபவர்களை தவிர்ப்பதற்காக கடல் மேற்பரப்பில் ஒளியை பரப்புகிறது.

Firefly Squid | Imege credit: : Wordpress.com

இரயில் புழுக்கள் (Rail Road Worm): தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த வண்டு லார்வாக்கள் ரயில் விளக்குகளை ஒத்த வடிவில் ஒளிரும் உடல்களைக் கொண்டுள்ளன.

Rail Road Worm | Imge credit: Pixels

தேள் (Scorpion): சில தேள் இனங்கள் ஒரு ஃப்ளோரசன்ட் எக்சோஸ்கெலட்டனைக் (Fluorescent exoskeleton) கொண்டுள்ளன. இது புற ஊதா ஒளியின் கீழ் தெரியும். இருட்டில் ஒரு வினோதமான கண்கவர் காட்சியை உருவாக்குகிறது.

Scorpion | Imge credit: Terminix
T20 World Cup 2024