தேனீக்களைப் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படும் சிறு பூச்சி இனம் தேனீ.

Honey Bee | Imge Credit: Pinterest

தேனீக்களால் தான் தாவரங்களில் மகரந்த சேர்க்கை உருவாகி தாவர இனங்கள் பெருகுகின்றன.

Honey Bee | Imge Credit: Pinterest

தேனீக்கள் கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் 30,000 முதல் 40,000 வரை தேனீக்கள் இருக்கும்.

Honey Bees | Imge Credit: Pinterest

ஒரு குழுவில் ஒரு ராணித் தேனீ, நூற்றுக்கணக்கில் ஆண் தேனீகள் மற்றும் வேலைக்காரத் தேனீகள் என மூன்று வகைகள் இருக்கின்றன.

Queen Honey Bee | Imge Credit: Pinterest

ஒரு தேன்கூடு ஒரு வருடத்தில் சராசரியாக 30 முதல் 100 பவுண்டுகள் வரை தேனை உருவாக்கும். இதற்கு 800 தேனீக்களின் கூட்டுப் பங்களிப்பு தேவைப்படுகின்றது.

Honey bee | Imge Credit: Pinterest

தேனீக்களுக்கு காதுகள் இல்லை. அவை சிறப்பு அசைவுகள் மூலம் ஒன்றை ஒன்றுத் தொடர்பு கொள்கின்றன. தேனீக்களுக்கு 4 இறக்கைகள் உண்டு. 6 கால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனமாகும் இந்த தேனீக்கள்.

Honey Bee | Imge Credit: Pinterest

தேனீக்களுக்கு ஐந்து கண்கள் உள்ளன. தேனிக்கு ஒரு lb தேனை உருவாக்க 55 ஆயிரம் மைல்களுக்கு மேல் பறக்க வேண்டும்.

Honey Bee | Imge Credit: Pinterest

ஒரு கூட்டிற்கு ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். இவை இரண்டு மூன்று ஆண்டுகள் வாழ்கின்றன. ராணி தேனீ ஒரு நாளைக்கு 2,000 முட்டைகள் வரை இடும்.

Queen Honey Bee | Imge Credit: Pinterest

ராணித் தேனீீ மற்ற தேனீக்களை காட்டிலும் பெரியதாக இருக்கும். இதன் கொடுக்கு மற்றவற்றின் கொடுக்கிலிருந்து வேறுபட்டு இருக்கும்.

Queen Honey Bee | Imge Credit: Pinterest

தேனீக்கள் சிறந்த பொறியாளர்களைப் போல செயல்பட்டு அறுங்கோண வடிவில் தேன்கூட்டை அமைக்கின்றன.

Honey Bees | Imge Credit: Pinterest

ராணித் தேனீ இடும் முட்டையிலிருந்து வரும் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி எனப்படும் ஊட்டச்சத்து மிக்க திரவம் தரப்படுகிறது. இந்த திரவத்தைப் பெற்ற ஒரு தேனீ மட்டுமே நல்ல வளர்ச்சி பெற்று ராணி தேனீயாக மாறுகிறது.

Honey Bee's Larva | Imge Credit: Pinterest
Boabab Tree | Imge credit: pinterest