கிரி கணபதி
அமெரிக்கர்கள் மொத்தமாக ஒவ்வொரு ஆண்டுக்கு சுமார் 85 மில்லியன் டன் காகிதத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதில் பெரும்பாலான மக்கள் காகிதத்தை மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக அப்படியே தூக்கி வீசி விடுகின்றனர்.
1 டன் காகிதத்தை மறுசுழற்சி செய்வது மூலமாக, 7000 கேலன் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
2000 பவுண்டுகள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் 17, மரங்கள் 350 கேலன் எண்ணெய் மற்றும் அதிகப்படியான நிலப்பரப்பை சேமிக்க உதவுகிறது. இதன் மூலமாக காற்று மாசுபாடு குறையும்.
சராசரியாக ஒரு அலுவலக ஊழியர் ஆண்டுக்கு 10,000 காகிதத் தாள்களைப் பயன்படுத்துகிறார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 பில்லியன் மரங்கள் மதிப்புள்ள காகிதங்கள் வீசப்படுகின்றன.
அலுவலகங்களில் உள்ள மொத்த கழிவுகளில், 70 சதவீதம் காகிதக் கழிவுகளை உள்ளன.
1 டன் செய்தித்தாள் தயாரிக்க 24 மரங்கள் வெட்டப்படுகின்றன. 3 அடி உயர அளவிலான செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதால் ஒரு மரம் காப்பாற்றப்படுகிறது.
ஆண்டுக்கு 100 பில்லியன் அட்டைப்பெட்டிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன.
80% சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மளிகைக் கடைக்காரர்கள் அட்டைப்பெட்டியை மறுசுழற்சி செய்கிறார்கள்.
அட்டைகளை மறுசுழற்சி செய்வது, புதிய அட்டையை உருவாக்க தேவையான ஆற்றலில் 75 சதவீதம் மட்டுமே தேவைப்படும்.
ஒரு டன் மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டை 46 கேலன் கச்சா எண்ணெயையும், 9 க்யூபிக் யார்ட்ஸ் அளவுக்கு நில ஆக்கிரமிப்பையும் சேமிக்கிறது.