நீர் நாய்கள் பற்றிய சில தகவல்கள்!

வாசுதேவன்

நீர்நாய்கள் கடல், ஆறுகள், நதிகளில் போன்றவற்றில் வசிக்க கூடியவை.

Otter | Imge Credit: Pinterest

இவைகள் கூட்டமாக செல்லும். தனியாகவும் வேட்டை ஆடும். கூட்டமாக செல்லும் இவை எந்த வகை மிருகங்களையும் தாக்க கூடியவை. கூரிய பற்களால் கடித்து விலங்குகளை திக்கு முக்காடவும் திணறடிக்கவும் செய்யும்.

Otter | Imge Credit: Pinterest

13 வகையான நீர் நாய்கள் உள்ளன. மீன்கள் அதிகம் சாப்பிடும். அது தவிர இவை உண்பவை நண்டுகள், தவளைகள் , பறவைகள், பூச்சிகள் ஆகியவை.

Otter | Imge Credit: Pinterest

இவை ஒரு வகை பாலூட்டி விலங்குகள். மெலிந்த நீண்ட உடல் வாகு கொண்டவை. நீரில் நீந்தவும், செல்வதற்கு தோதாக பாதங்களில் ஜவ்வுகளும், கூர்மை மிக்க நகங்களும் உள்ளன.

Otter | Imge Credit: Pinterest

ஒவ்வொரு வகையை பொறுத்து நீளம், எடை வேறுபடும். 2 முதல் 6 அடி நீளமும் , 1 முதல் 45 கிலோ அளவு எடை மாறுபடும்.

Otter | Imge Credit: Pinterest

60 முதல் 87 நாட்கள் கருவுற்றிருக்கும். புதிய குட்டிகளை தாய், தந்தை முன்பு வளர்ந்த குட்டிகள் கவனித்து கொள்கின்றன.

Otter | Imge Credit: Pinterest

ஒரு மாதம் ஆற்றின் கரையில் இருக்கும். பொந்தில் உள்ள குட்டிகள், 2 மாதங்களுக்கு பிறகு நீந்த தொடங்குகின்றன.

Otter | Imge Credit: Pinterest

சுமார் 1 வருட காலம் குடும்பத்துடன் வசிக்கும்.

Otter | Imge Credit: Pinterest

நீர் நாய்கள் 16 வருடங்கள் உயிர் வாழும்.

Otter | Imge Credit: Pinterest

ஒரு காலத்தில் காவிரி ஆற்றில் பல நீர் நாய்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது.

Otter | Imge Credit: Pinterest

சங்க காலத்தில் வாழ்ந்த நீர் நாய்கள் சமவெளிப் பகுதிகளில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றன.

Otter | Imge Credit: Pinterest

குளிர் மலைக் குன்றுகளிலும் தென் இந்தியாவில் நீர் நாய்கள் காணப்பட்டன. நகமற்ற நீர் நாய்களும் வசித்தன.

Otter | Imge Credit: Pinterest

நீர் நாய்களின் தோல்களுக்காக பல இடங்களில் இவை வேட்டையாடப்படுவதால். இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

Otter | Imge Credit: Pinterest

இவை சுரு சுரு மிக்கவை. விளையாட்டு தன்மையும், கூச்ச சுபாவமும் கொண்டவை.

Otter | Imge Credit: Pinterest

பங்களாதேசத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இவற்றைப் பிடித்து பழக்கி, மீன்கள் பிடிக்க உதவுவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

Otter | Imge Credit: Pinterest

சில மிருக காட்சி சாலைகளிலும் நீர் நாய்கள் வளர்க்கப் படுகின்றன. பொது மக்களும் பார்த்து மகிழலாம்.

Otter | Imge Credit: Pinterest
Home tips
அவசியமான சில வீட்டுக் குறிப்புகள்... அம்புட்டும் அட்சர லக்ஷம் பெறும்!