கே.எஸ்.கிருஷ்ணவேனி
வாட்டர் பாட்டிலில் வரும் வாடை, வழுவழுப்பு தன்மையை போக்க பத்து நாட்களுக்கு ஒரு முறை எலுமிச்சம் பழத்துண்டு 1, சிறிது கல் உப்பு, இரண்டு ஸ்பூன் மோர் மூன்றையும் சேர்த்து நன்கு குலுக்கி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வாடை போய்விடும்.
ஒரு மக் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சம் பழம், 2 ஸ்பூன் கல் உப்பு இரண்டையும் கலந்து சிறு பூச்சிகள், எறும்புகள், கரப்பான் பூச்சிகள் வரும் சமையலறை பகுதியில் துடைத்து விட அவற்றின் தொல்லைகள் இராது.
பேக்கிங் சோடாவுடன் சிறிது சர்க்கரை கலந்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் வைக்க கரப்பான் பூச்சிகளின் தொல்லை இராது.
தலையில் புழுவெட்டு இருந்தால் முடிகள் ஆங்காங்கே விழுந்து திட்டு திட்டாக வழுக்கை போல் காணப்படும். இதற்கு சின்ன வெங்காயத்தை தோல் எடுத்து நசுக்கி வழுக்கை விழுந்த இடங்களில் தேய்க்க முடி வளரும்.
தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூர பொடி சேர்த்து சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சு பகுதி, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் சூடு பறக்க தேய்க்க சளித் தொல்லை இராது.
பிரிட்ஜில் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை போட்டு வைக்க துர்நாற்றம், பூஞ்சை, வாடை எதுவும் வராது.
சூடான நீரில் தேவைப்படும் பூண்டை போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து உரிக்க தோல் எளிதில் வந்து விடும்.
ஆன்மீகம் மட்டுமின்றி மருத்துவத்துடனும் தொடர்புடைய அற்புதமான கருங்காலி மாலையை அணிவதால் எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல் மாங்காயையும் தட்டி பார்த்து சத்தம் வந்தால் வாங்கவும். இத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்.
கிச்சன் அலமாரிகளில் சிறுசிறு பூச்சிகள் வராமல் இருக்க அலமாரியின் ஓரங்களில் ஒரு துண்டு கற்பூரம் போட்டு வைக்கலாம்.
ஈக்கள் அதிகம் வரும் இடங்களில் தூபக்காலில் நெருப்பிட்டு கிராம்பு தூளை தூவ ஈக்கள் பறந்தோடிவிடும்.
கொசு விரட்டிகளை பயன்படுத்தாமல் விளக்கெண்ணெயும், வேப்பெண்ணையும் கலந்து மாலை நேரங்களில் வீட்டின் அறைகளில் விளக்கேற்றி வைக்க கொசுக்கள் ஓடிவிடும்.
செம்பு பாத்திரம் பளிச்சென்று இருக்க சிறிது உப்பையும் வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி துடைக்க பளிச்சென்று ஆகிவிடும்.