நான்சி மலர்
உங்கள் வீட்டில் புதிதாக செடிகளை நடும்போது கண்டிப்பாக அதை பராமரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் தாவரங்கள் செழிப்பாக வளர சத்தான மண்ணையும், நல்ல வடிகால் வசதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சூரிய ஒளி என்பது செடிகளுக்கு மிகவும் அவசியம். காய்கறிகள் மற்றும் பூச்செடிகளுக்கு 6 முதல் 8 மணி நேரம் சூரிய ஒளி கட்டாயம் தேவைப்படும்.
மண்ணின் மேற்பரப்பு உலர்ந்திருந்தால் தண்ணீரை பாய்ச்ச வேண்டும். அந்தந்த தாவரத்திற்கு ஏற்றார்ப்போல தண்ணீர் பாய்ச்ச வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமாக செடிகள் வளர நல்ல சத்தான உரத்தை அந்தந்த தாவரத்திற்கு தகுந்தார்ப்போல போடுவது செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
செடிகளுடன் இருக்கும் களைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். இல்லையென்றால் அது செடிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும்.
செடியில் உள்ள காய்ந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பகுதிகளை அவ்வப்போது கத்தரித்து நீக்குங்கள். இது ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும், மேலும் செடியின் வடிவத்தைப் பராமரிக்க உதவும்.
பூச்சிகள் மற்றும் நோய்கள் செடிகளுக்கு வராமல் கண்காணிக்க வேண்டும். இந்த பிரச்னையை கட்டுப்படுத்த இயற்கை மற்றும் வேதியியல் முறையை பயன்படுத்தலாம்.
பருவத்திற்கு ஏற்றார்ப்போல பராமரிப்பை மாற்ற வேண்டும். குளிர்க்காலத்தில் செடிகளை பாதுகாக்கவும், வெயில் காலத்தில் நீர்ப்பாய்ச்சி பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.
எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒருமுறை ஊற்றுவது செடிகளுக்கு மெக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களை கொடுக்கும்.
முட்டை ஓடுகளை நன்கு நொறுக்கி செடிகளுக்கு உரமாக போடுவது அவற்றிற்கு கால்சியம் சத்தைக் கொடுக்கும்.
தோட்டக்கலையில் செடிகள் வளர நேரம் எடுக்கும். எனவே, தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செயல்படுங்கள்.