பாரதி
கோடைக்காலங்களில் செடிகளுக்கு தினமும் நீர் ஊற்றினாலும் கூட காய்ந்து விடுகின்றன என்று கவலைப் படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம். எளிய வழிகளில் உங்களின் காய்ந்த செடிகளை எப்படி உயிர்த்தெழ வைப்பது என்றும், காய்வதற்கு முன்னர் அதனை எப்படி பராமரிப்பது என்றும் பார்ப்போம்.
அரிசி தண்ணீர்: ஒரு லிட்டர் அளவு சுடு நீரில் அரிசியை நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின் அந்த தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனை செடி இருக்கும் மண்ணில் ஸ்ப்ரே செய்து வந்தால், செடியின் வளர்ச்சி மேம்படும்.
வாழைப்பழ தோல்: வாழைப்பழங்களின் தோலை நீர் அடைத்த ஒரு ஜாரில் மூடியப்படி சில நாட்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அந்த நீர் செடிகளுக்குப் பயன்படுத்துங்கள். அதிலிருக்கும் பொட்டாசியம் சத்துக்கள் செடிக்கு அதிக ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும்.
முட்டை ஓடு: முட்டை ஓடுகளை நொறுக்கி அதனை மண்ணில் தூவி விடுங்கள். இதிலுள்ள கேல்சியம் சத்து, செடியிலுள்ள பழங்கள் அழுகாமல் பார்த்துக்கொள்ளும்.
லவங்கப்பட்டை: செடியை மண்ணில் நடுவதற்கு முன்னர் லவங்கப்பட்டையை ஊற வைத்தத் தண்ணீரில் வைய்யுங்கள். இதனால், வேர்ப்பகுதி வலுவடைந்து வேகமாக வளரத் தூண்டும்.
பூண்டு ஸ்ப்ரே: பூண்டு பற்களை சுடு நீரில் 30 நிமிடங்கள் ஊற வைய்யுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை ஸ்ப்ரே செய்து வந்தால், பூச்சிகள் வராது.
ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு தோல்களை சுடுநீரில் கொதிக்க வைக்கவும். பிறகு ஒரு மணி நேரம் ஆற வைத்துவிட வேண்டும். அதன் தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தினால், உங்கள் செடிகளுக்கு கொசுவே வராது.
Aspirin: இந்த அஸ்ப்ரின் டேப்லட்டை நீரில் ஊறவைத்து செடிகளில் ஸ்ப்ரே செய்தால், இது செடிகளின் நோயெதிர்ப்பு சக்தியாக விளங்கி நோய் வராமல் பாதுகாக்கும்.
பேக்கிங் சோடா ஸ்ப்ரே: 3 லிட்டர் தண்ணீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு செடிகளில் ஸ்ப்ரே செய்தால், பாதிக்கப்பட்ட செடிகள் சில நாட்களிலேயே உயிர்த்தெழும்.
சர்க்கரை நீர்: 2.5 லிட்டர் தண்ணீரில் 2 முதல் 3 டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும். இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலை பயன்படுத்தலாம். ஆனால், வேர்களில் ஸ்ப்ரே செய்ய வேண்டாம். அதேபோல் அதிகளவு பயன்படுத்த வேண்டாம்.