கால்களால் சுவையை உணரும் வண்ணத்துப் பூச்சி... வியக்க வைக்கும் உண்மைகள்!

கிரி கணபதி

வண்ணத்துப் பூச்சிகள் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாகும். இவற்றைப் பற்றிய ஆச்சரியமூட்டும் சுவாரசியமான தகவல்களை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Butterfly

1. இவை கால்களால் சுவையை உணரும் திறன் கொண்டவை. இலைகளில் அமர்ந்து உணவின் தன்மையை அறியும்.

Butterfly

2. வண்ணத்துப் பூச்சிகளுக்குக் கேட்கும் திறன் முற்றிலும் கிடையாது. அதிர்வுகளை மட்டுமே தங்களின் உடலால் உணரும்.

Butterfly

3. இவற்றின் கண்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய லென்ஸ்களால் ஆனவை. இதனால் புறஊதாக் கதிர்களை எளிதாகப் பார்க்கும்.

Butterfly

4. இவை சேற்றில் இருந்து தாதுக்களை உறிஞ்சிக் குடிக்கும். இந்தச் செயலுக்கு மட் பட்லிங் என்று பெயர்.

Butterfly

5. உலகில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்கள் உள்ளன. அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன.

Butterfly

6. இவற்றின் சிறகுகள் உண்மையில் வெளிப்படையான அமைப்பு கொண்டவை. ஒளியின் பிரதிபலிப்பால் மட்டுமே வண்ணங்களாகத் தோன்றும்.

Butterfly

7. பெரும்பாலான வண்ணத்துப் பூச்சிகள் சில வாரங்கள் மட்டுமே வாழும். சில இனங்கள் பல மாதங்கள் உயிர்வாழும்.

Butterfly

8. இவை முட்டையில் இருந்து கம்பளிப்பூச்சியாக முதலில் வெளிவரும். பின்னரே அழகிய வண்ணத்துப் பூச்சியாக உருமாறும்.

Butterfly

9. வண்ணத்துப் பூச்சிகள் திரவ உணவை மட்டுமே உட்கொள்ளும். தேனை உறிஞ்ச நீண்ட குழாய் போன்ற அமைப்பு இருக்கும்.

Butterfly

10. குளிர்ந்த வானிலையில் இவைகளால் பறக்க இயலாது. உடலை வெப்பப்படுத்திய பின்னரே சிறகடித்துப் பறக்கத் தொடங்கும்.

Butterfly

வண்ணத்துப் பூச்சிகள் சுற்றுப்புறச் சூழலின் ஆரோக்கியத்தைக் குறிக்கும் சிறந்த அடையாளமாகும். இயற்கையின் இந்த அழகிய பொக்கிஷங்களை அழியாமல் பாதுகாப்போம்.

Butterfly
Kitchen Vessels
சமையல் பாத்திரங்களை இப்படிப் பயன்படுத்தினா ஆயுள் குறையும்! உங்களுக்கு இது தெரியுமா?