நான்சி மலர்
Kitchen vessels:
1. பிரஷர் குக்கர்: பிரஷர் முழுமையாக இறங்குவதற்கு முன்பே விசில்லை தூக்கி ஆவியை வெளியேற்றுவது மற்றும் அதிகளவு தண்ணீரை ஊற்றி சமைப்பது.
2. நான்-ஸ்டிக் பேன்: இரும்பு அல்லது எஃகு கரண்டிகளைப் பயன்படுத்துவது, அதிக வெப்பத்தில் வெறுமனே சூடாக்குவது, மற்றும் சூடாக இருக்கும்போதே தண்ணீர் ஊற்றி கழுவுவது.
3. இரும்பு கடாய்: சமைத்தவுடன் சோப்பு போட்டு தேய்த்துக் கழுவி, காயவைக்காமல் அப்படியே வைப்பது.
4. மண் பாத்திரம்: சோப்பு அல்லது டிஷ்வாஷ் லிக்விட் பயன்படுத்தி கழுவுவது மண் துளைகள் அதை உறிஞ்சிவிடும்.
5. எஃகு பாத்திரங்கள்: பாத்திரம் சூடாவதற்கு முன்பே எண்ணெயை ஊற்றி சமைக்கத் தொடங்குவது உணவு அடியில் பிடித்துக்கொள்ளும்.
6. மிக்ஸி ஜார்: கொதிக்கும் சூடான பொருட்களை உடனே மிக்ஸியில் போட்டு அரைப்பது மூடி தெரித்து ஆபத்து ஏற்படும்.
7. பிளாஸ்டிக் டப்பாக்கள்: சூடான குழம்பு அல்லது உணவை நேரடியாக பிளாஸ்டிக் பாத்திரங்களில் ஊற்றி வைப்பது.
8. செம்பு / பித்தளை பாத்திரங்கள்: புளிப்பு அல்லது எலுமிச்சை சார்ந்த உணவுகளை இதில் சமைப்பது மற்றும் சேமிப்பது நச்சுத்தன்மை உருவாகும்.
9. அலுமினிய பாத்திரங்கள்: தக்காளி, புளி போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவுகளை அதிக நேரம் அலுமினியத்தில் சமைப்பது அல்லது ஊற வைப்பது.
10. கட்டிங் போர்டு: காய்கறிகள் மற்றும் இறைச்சி இரண்டிற்கும் ஒரே மரக் பலகையைப் பயன்படுத்துவது மற்றும் கழுவிய பின் ஈரமாகவே அாய்ச்சி வைப்பது.