கிச்சுகிச்சு மூட்டினால் சத்தமாகச் சிரிக்கும் சிம்பன்சி! பலரும் அறியா அதிர்ச்சி உண்மைகள்!

கிரி கணபதி

சிம்பன்சிகள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல; அவை மனிதர்களின் நெருங்கிய உறவினர்கள். அவற்றின் புத்திசாலித்தனம் மற்றும் மனிதர்களைப் போலவே இருக்கும் குணாதிசயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

chimpanzee

மனிதர்களின் DNA-வோடு 98% வரை ஒத்துப்போகும் ஒரே விலங்கு சிம்பன்சிதான். இதனால் இவை உடலமைப்பிலும், செயலிலும் மனிதர்களைப் போலவே இருக்கும்.

chimpanzee

கற்களைப் சுத்தியலாகப் பயன்படுத்திக் கொட்டைகளை உடைக்கவும், குச்சிகளைப் பயன்படுத்திக் கரையான் புற்றுக்குள் விட்டு கரையானைப் பிடிக்கவும் இவற்றுக்குத் தெரியும்.

chimpanzee

சிம்பன்சிகளுக்குப் புகைப்பட நினைவாற்றல் (Photographic Memory) மிக அதிகம். எண்களின் வரிசையையோ அல்லது பார்த்த இடத்தையோ மனிதர்களை விட ஆழமாக நினைவில் வைத்துக்கொள்ளும்.

chimpanzee

இவை வெறும் பழங்களை மட்டும் சாப்பிடும் சைவ விலங்குகள் அல்ல. சந்தர்ப்பம் கிடைத்தால் சிறிய குரங்குகள், பூச்சிகள் மற்றும் இறைச்சியையும் வேட்டையாடி உண்ணும்.

chimpanzee

மனிதர்களைப் போலவே இவற்றுக்கும் உணர்ச்சிகள் உண்டு. கிச்சுகிச்சு மூட்டினால் இவை சத்தமாகச் சிரிக்கும். சோகம், கோபம் மற்றும் பொறாமையையும் வெளிப்படுத்தும்.

chimpanzee

பார்ப்பதற்கு மனிதன் அளவில் இருந்தாலும், இவை மனிதனை விட 4 மடங்கு அதிக உடல் வலிமை கொண்டவை. கோபம் வந்தால், மிகவும் ஆபத்தானவை.

chimpanzee

கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து, "இது நான் தான்" என்று அடையாளம் கண்டுகொள்ளும் வெகு சில விலங்குகளில் இதுவும் ஒன்று. தன்னைத்தானே அழகுபார்த்துக் கொள்ளும்.

chimpanzee

இவை தரையில் படுப்பதில்லை. ஒவ்வொரு இரவும் மரத்தின் உச்சியில் கிளைகளையும், இலைகளையும் கொண்டு புதிதாக மெத்தை போன்ற கூடு கட்டி அதில் பாதுகாப்பாகத் தூங்கும்.

chimpanzee

சிம்பன்சிகளால் மனிதர்களின் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். பயிற்றுவித்தால், இவை சைகைகள் மூலம் மனிதர்களுடன் எளிதாக உரையாடும்.

chimpanzee

உடலுக்கு சுகமில்லை என்றால், காட்டிலிருக்கும் குறிப்பிட்ட மூலிகைச் செடிகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிட்டுத் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் அறிவு இவற்றுக்கு உண்டு.

chimpanzee
Shah rukh khan
ஷாருக்கான் கற்றுத்தரும் 'ஜீரோ டு ஹீரோ' மந்திரங்கள்!