ஷாருக்கான் கற்றுத்தரும் 'ஜீரோ டு ஹீரோ' மந்திரங்கள்!

நான்சி மலர்

பாலிவுட்டின் 'கிங் கான்' என்று அழைக்கப்படும் ஷாருக்கான் (SRK), அவரது கடின உழைப்பாலும், புத்திசாலித்தனமான பேச்சுகளாலும் பலருக்கு உத்வேகமாகத் திகழ்கிறார். அவரது சில சிறந்த பொன்மொழிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Shahrukh quotes

Om Shanthi Om திரைப்பட வசனம், "இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் எதையாவது மனதார விரும்பினால், அதை நீங்கள் அடைவதற்கு இந்த முழு உலகமே உதவி செய்யும்."

Om Shanti Om movie dialogue

Chak De! India திரைப்பட வசனம், "உங்களிடம் வெறும் 70 நிமிடங்கள் தான் உள்ளன. இந்த 70 நிமிடங்களில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் அடையாளமாக இருக்கப்போகிறது!"

Chak De! India movie dialogue

Happy New Year திரைப்பட வசனம், "உலகில் உள்ள எவராலும் உங்களை 'தோல்வியடைந்தவர்' (Loser) என்று சொல்ல முடியாது... நீங்களாகவே அதை ஒத்துக்கொள்ளும் வரை!"

Happy New Year movie dialogue

Dear Zindagi திரைப்பட வசனம், "கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தால் தான் இலக்கை அடைய முடியும் என்பதில்லை. சில நேரங்களில் எளிதான பாதையைத் தேர்ந்தெடுப்பதிலும் தப்பில்லை. நீங்கள் அந்தப் பயணத்தை ரசிக்கிறீர்களா என்பதுதான் முக்கியம்!"

Dear Zindagi movie dialogue

Kal Ho Naa Ho திரைப்பட வசனம், "இன்று, இந்த நிமிடம், உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். நாளை என்பது இருக்குமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்?"

Kal Ho Naa Ho movie dialogue

Baazigar திரைப்பட வசனம், "சில நேரங்களில் வெற்றி பெறுவதற்கு, சிலவற்றை நாம் இழக்க வேண்டியிருக்கும். தோற்றுக்கொண்டே இருப்பவன் தான் ஒருநாள் மிகப்பெரிய வெற்றியாளனாக மாறுவான்

Baazigar movie dialogue

"நீங்கள் செல்வந்தராகும் முன் தத்துவவாதியாக மாறாதீர்கள்."

SRK about money

"வெற்றி என்பது ஒரு சிறந்த ஆசிரியர் அல்ல. ஆனால் தோல்வி உங்களைத் தாழ்மையுள்ளவர்களாக (Humble) மாற்றும்."

SRK about Success

"நீங்கள் ஏதாவது ஒன்றை அடைய விரும்பினால், எப்போதும் உங்கள் இதயத்தின் குரலுக்குச் செவிசாய்க்கவும்."

Listen to you heart

"குழப்பமாக இருப்பது தவறில்லை. இந்த உலகில் தெளிவு பிறப்பதற்கான ஒரே வழி குழப்பம் தான்."

SRK about Problems

"இந்த உலகிலேயே ஒரே ஒரு மதம் தான் இருக்கிறது, அது கடின உழைப்பு."

SRK about hard work

"நேர்மையாகவும், கனிவான இதயத்துடனும் இருங்கள். வாழ்க்கையில் சில நேரங்களில் நீங்கள் பலவீனமடையலாம். ஆனால் அந்த இதயமே உங்களுக்குச் சிறந்த வாழ்க்கையைத் தரும்."

SRK about Honesty

"வாழ்க்கை என்பது நாம் வாழ முடிவு செய்யும் போதுதான் தொடங்குகிறது. நேற்று முடிந்ததை மறந்துவிட்டு, இன்றைய நாளை முழுமையாக வாழுங்கள்."

SRK about Happy life

"கடினமாகப் படியுங்கள், கடினமாக உழையுங்கள். ஆனால் ஒருபோதும் அடுத்தவரின் கனவில் வாழாதீர்கள். உங்கள் சொந்தக் கனவை நோக்கி ஓடுங்கள்."

SRK about chasing dreams

முதலிடம் என்பது ஒரு இலக்கு அல்ல, அது ஒரு பழக்கம்.

SRK about first place
Home cleaning
பொருட்களுக்கும் உண்டு ஆயுட்காலம்! இது அறிவது அவசியம்!