வீடுகளில் வாழ்ந்த சிட்டுக்குருவிகள் திடீரென மாயமானது ஏன்? அதிர்ச்சி உண்மைகள்!

கிரி கணபதி

ஒரு காலத்தில் நமது வீட்டின் முற்றங்களில் 'கீச் கீச்' என சத்தமிட்டபடி சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகள் இன்று அபூர்வமாகிவிட்டன. நம்முடனே வாழ்ந்த இந்த அழகிய சின்னஞ்சிறு பறவைகளைப் பற்றி பலரும் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்ப்போம்.

Sparrow

1. சிட்டுக்குருவிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஒருபோதும் வாழ்வதில்லை. அவை மனிதர்கள் வசிக்கும் வீடுகளைச் சுற்றியே பாதுகாப்பாக வாழப் பழகிய தனித்துவமான பறவைகளாகும்.

Sparrow

2. பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருந்தாலும், இவை மணிக்கு சுமார் 46 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை. ஆபத்து நேரங்களில் இதன் வேகம் இன்னும் சற்று அதிகரிக்கும்.

Sparrow

3. இயற்கையான சூழலில் வாழும் சிட்டுக்குருவிகளின் ஆயுட்காலம் வெறும் 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே ஆகும். ஆனால் கூண்டுகளில் வளர்க்கப்படும் குருவிகள் 15 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழும்.

Sparrow

4. இவை அடிப்படையில் விதைகளையும் தானியங்களையும் மட்டுமே விரும்பிச் சாப்பிடும் பறவைகள் ஆகும். ஆனால் குஞ்சுகளுக்கு அதிக புரதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புழு பூச்சிகளைப் பிடித்து ஊட்டும்.

Sparrow

4. இவை அடிப்படையில் விதைகளையும் தானியங்களையும் மட்டுமே விரும்பிச் சாப்பிடும் பறவைகள் ஆகும். ஆனால் குஞ்சுகளுக்கு அதிக புரதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புழு பூச்சிகளைப் பிடித்து ஊட்டும்.

Sparrow

5. சிட்டுக்குருவிகள் தண்ணீரில் குளிப்பதை விட, புழுதியில் குளிப்பதையே அதிகம் விரும்பும். இது அவற்றின் இறக்கைகளில் ஒட்டியுள்ள சிறு ஒட்டுண்ணிகளை அழிக்கப் பெரிதும் உதவுகிறது.

Sparrow

6. இவை நீர்வாழ் பறவைகள் இல்லை என்றாலும், இவற்றால் தண்ணீரில் நன்றாக நீந்த முடியும். ஆபத்தான நேரங்களில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க இவை தண்ணீருக்குள் நீந்திச் செல்லும்.

Sparrow

7. செல்போன் கதிர்வீச்சுகளால்தான் சிட்டுக்குருவிகள் அழிந்தன என்பது நிரூபிக்கப்படாத ஒரு கட்டுக்கதையாகும். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளே இவற்றின் உணவுப் பற்றாக்குறைக்கும் அழிவுக்கும் முக்கியக் காரணமாகும்.

Sparrow

8. முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக இவை மிகவும் பாதுகாப்பான இடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும். வீட்டின் பரண்கள், ஓடுகளின் இடுக்குகள் மற்றும் மரப்பொந்துகளில் வைக்கோல் கொண்டு அழகாகக் கூடு கட்டும்.

Sparrow

9. ஆண் குருவிகளையும் பெண் குருவிகளையும் அவற்றின் கழுத்து நிறத்தை வைத்தே நாம் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆண் குருவியின் கழுத்து அடர் கருப்பு நிறத்திலும், பெண் குருவி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

Sparrow

10. இந்தப் பறவைகளின் அழிவைத் தடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Sparrow

நம் தாத்தா பாட்டி காலத்தில் வீட்டின் ஒரு அங்கமாகவே இருந்த சிட்டுக்குருவிகள், இன்று நவீன மாற்றங்களால் அழியும் நிலையில் உள்ளன. நமது வீட்டு மொட்டை மாடிகளில் கொஞ்சம் தானியமும் தண்ணீரும் வைத்தால், இந்த அழகிய பறவைகளை மீண்டும் நம்மைத் தேடி வரச் செய்யலாம்.

Sparrow
Mango
மாம்பழம் சாப்பிடும் சரியான முறை! இனி சூடு பிடிக்கவே பிடிக்காது!