கிரி கணபதி
பிரானா மீன்கள் அமேசான் நதிகளில் வாழும் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக அறியப்படுகின்றன.
1. பிரானா மீன்கள் எப்போதும் மாமிசத்தை மட்டுமே உண்பதில்லை. சில நேரங்களில் ஆற்றிலுள்ள தாவரங்கள் மற்றும் பழங்களையும் விரும்பிச் சாப்பிடும்.
2. இவற்றின் பற்கள் மிகவும் கூர்மையான முக்கோண வடிவம் கொண்டவை. இவை உடைந்தால் உடனடியாக மீண்டும் புதிய பற்கள் முளைத்துவிடும்.
3. இந்த மீன்கள் ஆபத்தை உணரும்போது ஒருவித விசித்திரமான ஒலிகளை எழுப்பும். இது நாய்கள் குரைப்பதைப் போல மிகவும் சத்தமாக இருக்கும்.
4. இவை பெரும்பாலும் இறந்துபோன விலங்குகளையே தங்களது இரையாக்கிக் கொள்ளும். ஆற்றைச் சுத்தமாக வைத்திருப்பதில் இவற்றிற்கு மிகப் பெரிய பங்குண்டு.
5. மனிதர்களை பிரானாக்கள் தாக்குவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். திரைப்படங்களில் காட்டுவது போல் இவை மனிதர்களை உடனடியாக வேட்டையாடுவதில்லை.
6. இவை தங்களுடைய உடல் எடையை விட அதிக விசையுடன் கடிக்கும் தன்மை கொண்டவை. விலங்குகளின் கடினமான எலும்புகளைக் கூட எளிதாகக் கடித்துவிடும்.
7. பிரானாக்கள் கூட்டமாக வாழ்வது மற்ற விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்ல. தங்களை பெரிய உயிரினங்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே இவ்வாறு ஒன்றாக வாழ்கின்றன.
8. இந்த மீன்கள் பல மில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவற்றின் மிகப்பழமையான தொல்லுயிர் படிமங்கள் தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
9. இவை மற்ற உயிரினங்களுக்கு இரையாகும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. முதலையினங்கள் மற்றும் ஆற்று டால்பின்கள் இவற்றை மிகவும் எளிதாக வேட்டையாடிவிடும்.
10. கோடைக்காலத்தில் நீரின் அளவு குறையும்போது இவை மிகவும் ஆக்ரோஷமடையும். அந்தச் சமயங்களில் உணவுக்காக மற்ற பிரானாக்களையே கூட தாக்கிக் கொல்லும்.
பிரானா மீன்கள் கொடியவை என்றாலும் அவை இயற்கையின் சமநிலைக்குப் பெரிதும் உதவுகின்றன.