கடல் சிங்கம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

ஆர்.வி.பதி

கடல் சிங்கம் (Sea Lion) கடல் வாழ் பாலூட்டியாகும்.  இவை பெரும்பாலும் கடலில் வசித்தாலும் நிலத்திலும் நகர்ந்து நடக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. 

Sea lion

கடல் சிங்கம், சீல், வால்ரஸ் ஆகிய மூன்று உயிரினங்களும் பின்னிபெட்ஸ் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.  பின்னிபெட்ஸ் என்பதற்கு இறக்கை கால்கள் என்பது அர்த்தம். 

Sea lion

கடல் சிங்கமும் சீலும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே இருக்கும்.  கடல் சிங்கத்தின் காதுகள் வெளியே தெரியும்படி அமைந்திருக்கும்.  ஆனால் சீல்களின் காதுகள் வெளியே தெரியாது. 

Sea lion

கடல்சிங்கங்கள்  வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள பசிபிக் கடலிலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் வாழ்கின்றன.  தெற்கு மெக்சிகோ, கனடா போன்ற பகுதிகளில் கடலில் காணப்படுகின்றன. 

Sea lion

கடல்சிங்கங்கள் மீன்கள், நண்டுகள் போன்றவற்றை பெருமளவில் விரும்பிச் சாப்பிடுகின்றன.  கடல்சிங்கமானது கடலுக்குள் சுமார் அறுநூறு அடி ஆழத்திற்குச் சென்று தனக்குப் பிடித்தமான இரையைத் தேடும் இயல்புடையவை. 

Sea lion

கடல்சிங்கமானது கடலுக்குள் தொடர்ந்து சுமார் பதினைந்து நிமிடங்கள் இருக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.  

Sea lion

வேகமாக நீந்தும் திறமை பெற்ற இவை கடலில் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்  ஆற்றலைப் பெற்றுள்ளன. 

Sea lion

ஆண் கடல்சிங்கமானது பெண் கடல்சிங்கத்தைவிட பெரியதாக காணப்படுகிறது.  ஆண் கடல்சிங்கமானது ஏழு அடி நீளமும் பெண் கடல்சிங்கமானது ஆறு அடி நீளமும் கொண்டதாகக் காணப்படுகின்றன. 

Sea lion

கடல்சிங்கங்களின் கண்கள் சற்று பெரியதாகவே அமைந்துள்ளன. இதன்காரணமாக இவை கடலுக்குள் குறைந்த வெளிச்சத்திலும் நன்றாக பார்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. 

Sea lion

கடல்சிங்கத்தின் உடலில் அமைந்துள்ள பிளிப்பர்ஸ் எனும் உறுப்பின் உதவியோடு இவை நிலத்தில் நகர்ந்து நடக்கின்றன.  கடலில் நீந்தவும் இவை உதவுகின்றன. 

Sea lion

கடல் சிங்கத்தின் உடலில் ப்ளப்பர் எனும் தடிமனான படலம் அமைந்துள்ளது.  இது குளிர்ச்சியான கடற்பகுதிகளில் இவற்றின் உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

Sea lion

பெண் கடல்சிங்கமானது பிறந்து ஒன்பது வயதை அடைந்ததும் குட்டிகளை ஈனும் தன்மையை அடைகிறது. பெண் கடல்சிங்கமானது தனது குட்டியை சுமார் பதினொன்று அல்லது பனிரெண்டு மாதங்கள் சுமந்து ஒரு சமயத்தில் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனுகிறது.

Sea lion

பிறந்த கடல்சிங்கக் குட்டியானது சுமார் மூன்று அடி நீளமும் இருபத்திஐந்து கிலோ எடையும் உள்ளதாக காணப்படுகிறது. 

Sea lion

தாய் கடல்சிங்கமானது தனது குட்டியை சுமார் ஒரு வருடகாலத்திற்கு தன்னுடனே வைத்து கவனித்து வளர்க்கிறது.  குட்டியானது அடர்ந்த பிரௌன் நிறத்தில் காணப்படுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து தாயின் நிறத்தை அடைந்து விடுகிறது.

Sea lion

கடல்சிங்கங்கள் பொதுவாக இருபது ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழ்கின்றன. தற்போது உலகம் முழுக்க சுமார் 80000 கடல்சிங்கங்கள் மட்டுமே இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

Sea lion
Kolam
மார்கழி மாத கோலங்களும் அதில் உள்ள தெய்வ சக்தியும்!