மார்கழி மாத கோலங்களும் அதில் உள்ள தெய்வ சக்தியும்!

ஆர்.ஜெயலட்சுமி

மார்கழி என்றாலே கோலங்கள்தான் சிறப்பு. அதனை காலையில் நீராடிய பின்புதான் பெண்கள் போடுவார்கள். இரவில் கோலம் போடமாட்டார்கள்.

Kolam

கோலத்தில் பசுஞ்சாணம் பூசணிப்பூ வைக்க முடியாவிட்டாலும் மஞ்சளை பிசைந்து செம்பருத்தி, சாமந்திப் பூவையாவது வைக்கலாம்.

Kolam

இந்தக் கோலமும் இட முடியாதவர்கள் ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதில் மேற்கண்ட பூக்களை மிதக்கவைத்து, வாசல் அருகே வைத்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

Flower

வளைந்தும் நெளிந்தும் சுழித்தும் போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கையின் சுக, துக்க பின்னல்களால் ஆனது என்பதையும் சுழிகள்போல துன்பம் வந்தாலும் துணிவோடு இருக்கவேண்டும் என்கிற தைரியத்தையும் உணர்த்துகின்றது.

Kolam

விசேஷ நாட்களில் காவி இடுவது சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. பச்சரிசி மாவு சிவ தத்துவத்தையும் காவி சக்தி தத்துவத்தையும் உணர்த்துகிறது.

Kolam

தடைகளைத் தகர்க்க விநாயகர் கோலங்களையும் சௌபாக்கியம் பெற சங்கு கோலங்களையும் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த கட்டம் கோலங்களையும் பிள்ளைகள் படிப்பில் பிரகாசிக்கக் கோடு கோலங்களையும்…

Kolangal

ஆரோக்கியம் அளிக்க அழகு கோலங்களையும் பூரிப்புத் தர பூக்கோலங்களையும் ஒளிமயமான வாழ்வுக்கு விளக்கு கோலங்களையும் சிறந்து வாழ்க்கை பெற சிவலிங்க கோலங்களையும்...

Kolangal

காரிய வெற்றி பெற கார்த்திகை தீபக் கோலங்களையும் திருமணம் நடந்தேற லட்சுமி நாராயண கோலங்களையும் பதவி உயர்வு தர சங்கிலி கோலங்களையும் இல்லற வாழ்வுக்குக் கல்யாண கோலங்களையும்...

Kolangal

நல்ல கணவனை அடைய கடவுள் கோலங்களையும் கிரக பாதகங்களை சாதகமாக நவகிரக கோலங்களையும் தரமான வாழ்வுக்கு தசாவதார கோலங்களையும் மன நிம்மதி தர ஐஸ்வர்ய கோலங்களையும்...

Kolangal

பொன், பொருள்  குவிய தாமரைப் பூ கோலங்களையும் நோய் நீங்க ஆறுமுக சக்கர கோலங்களையும் கண் திருஷ்டியை விரட்ட பூசணிக்காய் கோலங்களையும் போட வேண்டும்.

Kolangal

வீட்டு வாசலில் கோலம் இடுவதே கெட்ட ஆவிகள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்கத்தான். ஒவ்வொரு கோலத்திலும் போடும் கோட்டிற்கு தீய சக்திகளை உள்ளே நுழையவிடாமல் காக்கும் சக்தி உண்டு.

Kolam

வடக்கில் குபேரனும் கிழக்கில் இந்திரனும் மேற்கில் வருணனும் தெற்கில் எமனும் வாசம் செய்வதால் தெற்கு பார்த்தோ அல்லது தெற்கில் கோலம் முடிவுறும்படியோ போடக்கூடாது.

Kolam

கோலம் போடுவதால் மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும்.

Kolam

கோலம் போடுவதால் வீடு மங்கலகரமாக காட்சியளிக்கும் தினசரி கோலம் போடும்போது வீட்டில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு குறைவே ஏற்படாது.

Kolam
Monitor lizards | Imge Credit: Pinterest
உடும்புகள் குறித்து சில தகவல்களைக் காண்போம்!