காண்டாமிருகத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வேகமாக அழிந்து வரும் விலங்கினங்களில் காண்டாமிருகமும் ஒன்று. இவை ஆப்பிரிக்கா, இந்தியா, சுமித்ரா, ஜாவா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

Rhinoceros

இந்தியாவில் வாழும் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பை கொண்டது. ஆப்பிரிக்கா காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகள் உண்டு.

Rhinoceros

காண்டாமிருகங்களில் ஐந்து வகைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை, ஒற்றைக் கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா என ஐந்து வகைகள் உள்ளன.

Rhinoceros

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்து காண்டாமிருகம் தான் பெரிய உயிரினமாகும். எல்லா வகையான காண்டாமிருகமும் ஆயிரம் கிலோ எடைக்கும் அதிகமானது.

Rhinoceros

இவை ஆறடி உயரம் வரை வளரக்கூடியது. சராசரியாக 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. இவற்றின் தோல் மிகவும் தடிமனானவை.1.5 - 5 சென்டிமீட்டர் வரை தடிமனாக இருக்கும்.

Rhinoceros

காண்டாமிருகத்தின் கர்ப்ப காலம் 15- 16 மாதங்களாகும். பிறக்கும் கன்றானது 40 முதல் 64 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

Rhinoceros

தாவர உண்ணிகளான இவை இலை தழைகளையும், புற்களையும் உண்டு வாழும். இதன் கொம்புகள் மண்ணை தோண்டுவதற்கும், கிழங்குகளை மண்ணுக்கு அடியிலிருந்து எடுப்பதற்கும், எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்தும்.

Rhinoceros

உலக அளவில் தந்தத்துக்கு நிகரான அளவு விலை கிடைப்பதால் காண்டாமிருகங்கள் அதன் கொம்பிற்காக வேட்டையாடப்படுகின்றன.

Rhinoceros

காண்டாமிருகத்தின் மூளை 400‌‌ கிராம் முதல் 600 கிராம் எடை கொண்டதாக மிகவும் சிறிய அளவில் இருக்கும்.

Rhinoceros

உலகத்தில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு அஸ்ஸாமில் உள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் உள்ளது.

Rhinoceros

ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும். தண்ணீர் போல இருக்கும் இந்த பாலில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

Rhinoceros
School bag | Img Credit: Vismiintrend